Cinema News
அத சொல்ல முடியல!.. ஓட்டுக்கு பணம் வாங்கதன்னு நீ சொல்றியா?.. விஜயை விளாசிய ராஜன்…
அரசியலில் நடிகர்கள்:
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கியது. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர். எம்.ஜி.ஆர் அதிமுக எனும் கட்சியை துவங்கி ஆட்சியையை பிடித்தார். அவருக்கு பின் நடிகையாக இருந்த ஜெயலலிதா அந்த கட்சியை கைப்பற்றி முதல்வராக இருந்தார். ஆந்திராவிலும் என்.டி.ராமராவ் முதல்வராக மாறினார்.
அதன்பின் ரஜினி மீது அரசியல் காற்று வீசியது. அவரும் பல வருடம் அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி எஸ்கேப் ஆனார். விஜயகாந்த், சரத்குமார், நெப்போலியன் உள்ளிட்ட சில நடிகர்கள் அரசியலில் இறங்கினார். இதில் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார்.
அரசியலில் விஜய்:
தற்போது அரசியலில் விஜய் பெயர் அடிபட்டு வருகிறது. ஏனெனில், பல வருடங்களாகவே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் நற்பணிகளை செய்து வருகின்றனர். விஜயும் தனது இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை செய்கிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் அவரின் கட்சியின் கணிசமாக வெற்றியும் பெற்றனர்.
சமீபத்தில் கூட பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பெற்றோருடன் நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அந்த மேடையில் பேசிய விஜய் ‘ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.. நீங்கள்தான் நாளைய எதிர்காலம்’ என அறிவுரையும் கூறினார்.
நடிப்புக்கு பிரேக்:
இதையடுத்து விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பலரும் பேச துவங்கிவிட்டனர். அவரின் ரசிகர்களும் தமிழகத்தின் பல இடங்களிலும் ‘நாளைய முதல்வர்’ என போஸ்டரையும், பேனரையும் வைத்து வருகின்றனர். இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என விஜய் எப்போதும் சொல்வதும் இல்லை. பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் வேலை செய்யப்போவதாகவும், அதற்காக மூன்று வருடங்கள் நடிப்புக்கு பிரேக் விடுவதாகவும் சமீபத்தில் செய்திகள் கசிந்தது. ஆனால், விஜய் தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்தது.
பிளாக் டிக்கெட்:
இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜன் ‘விஜய் அரசியலுக்கு வருவதாக எல்லோரும் பேசுகிறார்கள். ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என அவர் அறிவுரையும் சொல்கிறார். ஆனால், அவர் நடிக்கும் படங்களுக்கு 500,1000 முதல் 5 ஆயிரம் வரை அவரின் ரசிகர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கிறார்கள். இதை விஜய் கேட்பதில்லை. இப்படி செய்ய வேண்டாம் என அவர் அறிவுரையும் சொல்வதில்லை. முதலில் அவர் இதை செய்ய வேண்டும். அப்புறம் அவர் அரசியலுக்கு வரட்டும்’ என காட்டமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: பண்ணை வீட்டில் துணை நடிகைகளுடன் ஜல்சா!.. காமெடி வடிவேலு மாமாக்குட்டி ஆன கதை!…