தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவுக்கே கதைக்கான பிரமாண்டம் என்றால் என்ன என்று காட்டியவர் இயக்குனர் ஷங்கர். இவரது படங்கள் பிரமாண்டமாக இருக்கும். ஆனால், அது கதையோடு சேர்த்து பார்க்கையில், அது கதைக்கு தேவைப்பட்டதாக இருக்கும்.
இவரை பார்த்து பலர் தங்களது படங்களுக்கு ரெபரென்ஸ் எடுத்து கொள்வார்கள். இவரை பற்றி கமர்சியல் கிங் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சில வார்த்தைகள் குறிப்பிட்டார்.
இதையும் படியுங்களேன் – ஒரே படம் 26 வருஷமா ஒரு தியேட்டர்ல.., உலக மகா ஹிட்னா இது தான்.! ஆல் டைம் பேவரைட்..,
அதாவது, தசவாதாரம் படம் எடுக்கும் போது, முதலில் அதன் பட்ஜெட் மிக சிறியது. அதன் பிறகு 10 கெட்டப், அதற்கான திரைக்கதை என விவரிக்கும் போது மிக பெரியதாக மாறியது. இதனை நான் செய்து விடுவேனா என்ற சந்தேகம் வந்தது.
கமல் சார் தான் இது சரியா வரும் நீங்கள் படத்தை இயக்குங்கள் என கூறினார். எனக்கு சந்தேகம் இந்த மாதிரி ப்ரமாண்டங்களை ஷங்கர் தான் இயக்குவார். அவரை பார்த்து நாம் சூடு போட்டு கொண்ட மாதிரி ஆகிவிடுமோ என பயந்தேன். இருந்தாலும், கமல் கொடுத்த தைரியத்தால் படம் நல்லபடியாக வந்தது படமும் நல்ல ஹிட். என தனது தசாவதாரம் பட அனுபவத்தை குறிப்பிட்டார்.
விஜய் டிவியில்…
SK_ Keerthi…
ஞானவேல் ராஜா…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…