நைட் புல்லா சித்ரவதை! தாங்க முடியல.. சாண்டியின் முன்னாள் மனைவி கொடுத்த அதிர்ச்சி பேட்டி

ஏதோ ஒரு மூலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடன இயக்குனராக மாறியிருப்பவர் சாண்டி. மானாட மயிலாட நிகழ்ச்சியில் கொரியோகிராஃபராக தன்னுடைய முகத்தை காட்டிய சாண்டி கலா மாஸ்டரால் மக்கள் முன் பிரபலமாக அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு ஃபுல் எண்டர்டெயினராக மாறினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகே சாண்டிக்கு பல படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கமலின் விக்ரம் படத்தில் கமலுக்கே டான்ஸ் சொல்லிக் கொடுக்க அதிலிருந்து ஒரு மாபெரும் புகழை அடைந்தார் சாண்டி.

அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பிரபுதேவாவிற்கே நடன இயக்குனராக மாறியிருக்கிறார். இந்த நிலையில் சாண்டியின் முன்னாள் மனைவியும் நடிகையுமான காஜல் பசுபதி ஒரு சுவாரஸ்யமான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

அதாவது காஜலை பொறுத்தவரைக்கும் புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் கீதா, வல்லவன் படத்தில் வரும் ரீமா சென் இவர்களை போல ஒவர் அன்பை வெளிப்படுத்துபவராம்.எந்த மாதிரியான பொண்ணு இருக்கக் கூடாதுனு ஒரு பையன் நினைக்கிறானோ அந்த மாதிரி கேரக்டர்தான் நான் என காஜல் கூறினார். சாண்டியுடன் இருந்தவரைக்கும் இப்படித்தான் இருந்தாராம். அதாவது சாண்டியிடம் ஓவர் லவ்வை காட்டியிருக்கிறார்.

சாண்டிக்கு பிறகு இன்னொரு ஆண் காஜல் வாழ்க்கையில் நுழைய முன்பு செய்த தவறை இனிமேல் பண்ணக் கூடாது என இந்த பையனிடம் லவ் என்ற பெயரில் டார்ச்சர் செய்யவில்லையாம். நீ நீயா இரு. நான் நானா இருக்கிறேன். நீயும் கேள்விக் கேட்கக் கூடாது. நானும் கேள்விக் கேட்க மாட்டேன் என கூறினாராம் காஜல். ஆனால் அந்த பையனால் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லையாம்.

சாண்டியை லவ் பண்ண மாதிரி என்ன எப்ப பண்ணுவ என கேட்டாராம். இருந்தாலும் காஜல் இந்த பையனை முழுசாக நம்பாமல்தான் லிவ்விங்கில் இருந்திருக்கிறார். மேலும் சாண்டியிடம் காட்டிய பைத்தியக்காரத்தனமான அந்த லவ் எல்லாம் இனிமேல் உன்னிடமும் காட்ட முடியாது. கிளப்புக்கு போவேன். நண்பர்களுடன் ஜாலியாக இருப்பேன். வேண்டுமென்றால் நீயும் வா என ஒரு நாள் கிளப்புக்கு அழைத்துக்கொண்டு போனாராம்.

அங்கு ஒரு ஆண் நண்பரை நட்பு ரீதியில் கட்டிப் புடிக்க காஜலின் பாய்ஃபிரண்டுக்கு கோபம் வந்ததாம். இதை ஒரு நான்கு வருடம் மனசுக்குள்ளேயே வைத்திருந்து ஒரு நாள் இரவு முழுக்க காஜலை அடி அடி என அடித்து துவைத்து விட்டாராம். கொஞ்ச நஞ்ச அடியா? ஐயோ சாமி வேண்டாம் என தன் பாய்ஃபிரண்டை பிரிந்து வந்து விட்டதாக காஜல் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it