“காக்க காக்க” பார்ட் 2 ரெடி?? சூர்யாவுக்கு வில்லனாக களமிறங்கும் வெரைட்டி நடிகர்… திடீர்ன்னு இப்படி ஷாக் கொடுத்தா எப்படி??
கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, ஜீவன் ஆகியோரின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “காக்க காக்க”. இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக அமைந்தது.
மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரஸ்யமான கதையம்சமும் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ஹாரீஸ் ஜெயராஜ்ஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில் “காக்க காக்க” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது சூர்யா, பாலா இயக்கிய “வணங்கான்” திரைப்படத்தில் இருந்தும் இயக்குனர் ஹரியின் புராஜக்ட்டில் இருந்தும் வெளியேறிய தகவலை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
அதே போல் கௌதம் மேனன் சூர்யாவுக்கு ஒரு கதை சொன்னதாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. எனினும் அந்த கதை சூர்யாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் கௌதம் மேனனுக்கு “நோ” சொன்னதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யாவும் கௌதம் மேனனும் மீண்டும் சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: “வாரிசு படம் தள்ளிப்போனதற்கு உண்மையான காரணம் இதுதான்”… ஓஹோ இதுதான் விஷயமா??
அந்த சந்திப்பில் கௌதம் மேனன் “காக்க காக்க” பார்ட் 2 உருவாக்கலாம் என கூறினாராம். அதற்கு சூர்யாவும் ஓகே என தலையாட்டியுள்ளாராம். மேலும் “காக்க காக்க” பார்ட் 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.