Connect with us

டப்பிங் ரூமில் ரொமான்ஸோ ரொமான்ஸ்!… விக்னேஷ்சிவன் – நயன்தாரா அடாவடி தாங்கலயே!…

nayan

Cinema News

டப்பிங் ரூமில் ரொமான்ஸோ ரொமான்ஸ்!… விக்னேஷ்சிவன் – நயன்தாரா அடாவடி தாங்கலயே!…

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது வெளியே சென்று ஊரை சுற்றி நெருக்கமாக நின்று புகைப்படங்களை வெளியிட்டு 90 கிட்ஸ் மனதை அலைக்கழித்து வருகின்றனர். நயனின் பிறந்தநாளுக்கு அவரை கொஞ்சி கொஞ்சி வார்த்தைகளை போட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறி நயனின் ரசிகர்களை கடுப்பேற்றி வருகிறார் விக்னேஷ் சிவன்.

nayan

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. சென்னை போய்ஸ்கார்டனில் 2 வீடுகளை வாங்கியுள்ள நயன்தாரா அங்கு குடியேறியவுடன் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

nayan

ஒருபக்கம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதேபோல், சமந்தாவும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் நயன்.

nayan

இது தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டயலாக் நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம்’ என உருகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayan

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top