இதென்ன புதுசா இருக்கு.?! விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் கோடிகள்.!

by Manikandan |
இதென்ன புதுசா இருக்கு.?! விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் கோடிகள்.!
X

விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா என இரு ஹீரோயின்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் இயக்கியுள்ளார்.

vijay sethupathi

இந்த படத்தை லலித் ஒப்பந்தம் செய்கையில் சுமார் 25 கோடிக்கு மொத்த படத்தையும் எடுத்து தரக்கோரி விக்னேஷ் சிவனிடம் சொல்லியிருந்தாராம். அவரும் அதற்குள் முடித்து கொடுத்துவிட்டார்.

அவர் ஒப்பந்தம் போடுகையில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் பாலிவுட் வரை பிரபலமாகவில்லை. ஆனால், தற்போது கதையே வேறு மூன்று பேரும் பாலிவுட் வரை பிரபலம். அதனால், இந்த படத்தின் மார்க்கெட் தற்போது உச்சம் தொட்டு வருகிறதாம்.

இதையும் படியுங்களேன்- தயவு செய்து இதை செய்ஞ்சிட்டு போங்க.! இயக்குனர்களை கெஞ்சும் FIR ஹீரோ.!

அதிலும், தமிழில் முழுக்க முழுக்க ஒரு காதல் படம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. அதனால், தமிழில் எதிர்பார்ப்பு அதிகம், தெலுங்கில் விஜய் சேதுபதி, சமந்தாவுக்கு நல்ல மார்க்கெட், பாலிவுட்டில் இருந்து இப்பட ரிமேக் உரிமைக்கு கடும் போட்டி என தற்போது எக்கச்சக்க லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்து வருகிறது காதுவாக்குல ரெண்டு காதல்.

Next Story