Categories: latest news

ஒரு போன் 2 சிம்கார்டு.! காலில் விழுந்த விஜய் சேதுபதி.! தெறிக்கும் வீடியோ.!

விஜய் சேதுபதி, நயன்தாரா , சமந்தா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பளார் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் என கூறப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – தளபதி விஜயின் திருமண சர்ச்சை.! கோபப்பட்டு SAC போட்டுடைத்த உண்மை.!

டீசரில் விஜய் சேதுபதி நயன்தாரா – சமந்தா இருவரிடமும் ஒரே நேரத்தில் காதலை வெளிப்படுத்தி கடைசியில் காலில் விழுந்து விடுகிறார் விஜய் சேதுபதி. கலகலப்பாகவும், ரொமான்ஸ் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது.

தமிழில் நல்ல முழு நீள காதல் திரைப்படம் வெளியாகி நீண்ட இடைவெளி வந்து விட்டது. அந்த இடைவெளியை கண்டிப்பாக இந்த திரைப்படம் நிரப்பும் என கூறப்படுகிறது. டீசரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

 

Published by
Manikandan