ஒரே நாளில் அடிச்சி தூக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல்... எவ்வளவு வசூல் தெரியுமா?...

by சிவா |
kvrk
X

நானும் ரவுடிதான் படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி-நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்து கடந்த வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தை விக்னேஷ் சிவனும்,நயன்தாராவும் இணைந்து தங்களின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவன்ம் மூலம் தயாரித்துள்ளனர்.

ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலித்து மாட்டிக்கொண்டு முழுக்கும் படி திரைக்கதை அமைத்திருந்தார் விக்னேஷ் சிவன். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் டீசர் வீடியோக்களை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

kvrk

பீஸ்ட், கேஜிஎப்- 2 இரண்டு படங்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் இப்படம் ஒருபக்கம் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளே இப்படம் தமிழகத்தில் 5.6 கோடியையும், 2வது நாளில் ரூ.5.1 கோடியையும்,3வது நாளில் 6.3 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதையடுத்து, இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இதில்,விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story