க்யூட்னஸ் சும்மா அள்ளுது!.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்

by சிவா |
க்யூட்னஸ் சும்மா அள்ளுது!.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்
X

Kaavya arivumani: சென்னையை சேர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சின்ன பெண்ணாக இருந்ததால் அவரால் சினிமாவில் நுழைய முடியவில்லை. எனவே, சீரியல் பக்கம் வாய்ப்பு தேடினார். அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

kaavya

அதன்பின் சின்னத்திரை சீரியல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதற்கு முன் அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ளவே அந்த வேடம் இவருக்கு கிடைத்தது.

kaavya

ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள காவ்யா கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சில எபிசோட்களில் நடித்த காவ்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்., சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக அவர் சீரியலை விட்டுவிட்டதாக சொல்லப்பட்டது.

kaavya

ஆனால், அவர் நினைத்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எனவே, எப்படியாவது தனது அழகை காட்டி வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். அதாவது, கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

kaavya

இந்நிலையில், சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் எக்கச்சக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

kaavya

Next Story