உனக்கு அந்த ரெண்டும்தான் ஹைலைட்!... சீரியல் நடிகை தாறுமாறா ரசிக்கும் ரசிகர்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு அதிக டி.ஆர்.பி உள்ளது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், முகத்தை குளோசப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு ஹைலைட்டே உன்னோடு ரெண்டு கண்கள்தான்’ என பதிவிட்டு வருகின்றனர்.