Kaavya arivumani: கடந்த சில வருடங்களாகவே சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகள் போல விதவிதமான மற்றும் கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதில் காவ்யா அறிவுமணியும் ஒருவர்.
சென்னையை சேர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே மாடலிங் மற்றும் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சமூகவலைத்தளங்களில் பதிவிட துவங்கினார். ஒருபக்கம், சினிமாவில் நுழையை முயற்சிகள் எடுத்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் அதிக டி.ஆர்.பியை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில எபிசோட்களில் முல்லையாக நடித்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.
சின்னத்திரையில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்தாரோ என்னவோ, அவசரப்பட்டு அந்த முடிவை எடுத்தார். ஏனெனில், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இப்போது எதிலும் வாய்ப்பு இல்லாமல் சும்மா இருந்து வருகிறார்.
எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், குட்டி பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…