“காதல்” நாயகன் நிராகரித்த கதை… தனுஷுக்கு அடித்த லக்… இதுதான் நேரங்குறது!!
கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ், ஷ்ரியா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திருவிளையாடல் ஆரம்பம்”. இத்திரைப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். டி.இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“திருவிளையாடல் ஆரம்பம்” திரைப்படம் தனுஷிற்கு மட்டுமல்லாது 2006 ஆம் ஆண்டின் மிக முக்கிய வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது. மிகவும் நகைச்சுவையாக அமைக்கப்பட்ட திரைக்கதையும், மிகவும் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்ட காதல் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் இத்திரைப்படம் தனுஷின் கேரியரில் ஒரு திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாகவும் அமைந்தது. இந்த நிலையில் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பரத், “திருவிளையாடல் ஆரம்பம்” திரைப்படத்தை தான் தவறவிட்டதை குறித்த ஒரு சோகமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பரத், “காதல்” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமான நடிகராக அறியபட்டார். அதனை தொடர்ந்து “செல்லமே”, “பட்டியல்”, “எம்டன் மகன்”, “வெயில்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் பரத்.
இதையும் படிங்க: “அஜித் படத்தை வேணும்ன்னே ஃப்ளாப் ஆக்குறாங்க”… பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு… இதென்ன புது கதையா இருக்கு??
ஆனால் ஒரு காலகட்டத்தில் பரத்தின் கேரியர் லேசாக தடுமாறியது. எனினும் சமீபத்தில் வெளியான “மிரள்” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் பரத். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பரத், “நான் பிப்ரவரி 14 என்றொரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இயக்குனர் பூபதி பாண்டியன் சார் என்னிடம் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தின் கதையை கூறினார். எனக்கு அந்த கதை செட் ஆகுமா என்ற குழப்பம் வந்தது. ஆதலால் அந்த படத்தில் என்னால் நடிக்கமுடியவில்லை.
அதன் பின் அந்த கதை தனுஷிற்கு சென்றது. அப்படித்தான் அந்த படத்தில் தனுஷ் நடித்தார். அந்த காலகட்டத்தில் அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆதலால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்” என்று கூறியிருந்தார்.