தேசியவிருது கிடைச்சாலும் அதை முழுசா அனுபவிக்கமுடியல!.. சோகங்களை பகிர்ந்த அஜித் பட இயக்குனர்..

ajith
அஜித்தின் சினிமா கெரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் ‘காதல் கோட்டை’. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித், தேவயானி, மணிவண்ணன், தலைவாசல் விஜய், ஹீரா, கரண் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படம். அப்போது தான் அஜித் ஒரு வளரும் நடிகரகளின் பட்டியலில் இருந்தார்.

ajith1
சொல்லப்போனால் முதல் வெற்றி, தரமான வெற்றி என்ற அஜித்திற்கு காதல் கோட்டை படம் தான். இந்தப் படத்தை
இயக்கியவர் அகத்தியன். காதல் கோட்டை படம் தேசிய விருதையும் பெற்றது. அதை எடுத்த இயக்குனரான அகத்தியனுக்கும் தேசிய விருதை பெற்றுத் தந்தது.
ஆனால் தேசிய விருதை வாங்கியும் அதை முழுசா அனுபவிக்க முடியல என மிகவும் வருத்தத்துடன் கூறினார் அகத்தியன். அகத்தியனி இயற்பெயர் கருணாநிதி. சினிமாவிற்காக அகத்தியன் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது. உதவி இயக்குனராக எழுத்தாளராக பாடலாசிரியராக பன்முக திறமைகளை வாய்க்கப்பெற்றவர் அகத்தியன்.

ajith2
1978 ஆம் ஆண்டு சினிமா நோக்கி பயணப்பட்டவர் ஏகப்பட்ட அவமானங்கள், சோகங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் கடந்து வந்தவர். அவர் கூறும் போது நிறைய கதைகளை சொல்வாராம். ஆனால் அந்த கதைகளைக் கேட்டுவிட்டு வேறு ஒருவரிடம் விற்றுவிடுவார்களாம்.
அல்லது கதையை கேட்டுவிட்டு இதில் என் பெயரை போட்டுக் கொள்கிறேன் என்று மற்ற இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்களாம். உதவி இயக்குனராக இருக்கும் போது கதை விவாதத்தில் இருப்பார்களாம். அப்போது ஏதாவது கதையில் மாற்றுக் கருத்து இருந்தால் அகத்தியன் எழுந்து சொல்வாராம்.

agathiyan
ஆனால் வெளியில் வந்து அகத்தியனை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு கதை சொல்லும் போது எங்களுக்கே ஆலோசனை வழங்குகிறாயா என்று சரமாரியாக திட்டுவார்களாம். இப்படி பல கஷ்டங்களை கடந்து தான் சினிமாவில் மட்டுமில்லை மற்ற துறைகளிலும் பல பேர் வேதனையை சந்தித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : இவர்தான் சார் என்னைய முதன்முதலா அப்படி கூப்பிட்டது- கேமரா மேனிடம் பெருமையாக சொன்ன அஜித்… யார் அந்த நடிகர் தெரியுமா?
பட்டதாரியாக இருந்தாலும் தன்னை ஒருபோதும் மனுஷனாக கூட இந்த சினிமா பார்க்கவில்லை என்றும் வருந்தினார். காதல் கோட்டை படத்திற்காக தேசிய விருதை வாங்கினேன். ஆனால் அதை எடுத்துக் கொண்டு என் அறையில் உட்கார்ந்து அழுதுவிட்டேன். ஏனெனில் இந்த ஒரு விருதை வாங்குவதற்கு 12 வருடங்கள் போராடியிருக்கிறோமா? என்று நினைத்து அழுததாக அகத்தியன் கூறினார்.