காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்த முன்னணி நடிகர்… அப்பாவால் பறிபோன வாய்ப்பு…

Published On: May 24, 2024
| Posted By : Akhilan

Kadhal Kottai: நடிகர் அஜித் நடிப்பில் மிகப்பெரிய சூப்பர்ஹிட் திரைப்படமான காதல் கோட்டை படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் இல்லையாம். அவருக்கு பதில் முன்னணி நடிகர் ஒருவருடன் பேச அவர் அப்பாவால் அந்த வாய்ப்பு போனதாம்.

இயக்குனர் அகத்தியன் காதல் கோட்டை திரைப்படத்தை எழுதியபோது அப்படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை. பின்னர் வான்மதி என்ற வெற்றிப் படத்தை அவர் கொடுத்ததும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தான் இப்படத்தை தயாரிக்க முன்வந்தாராம்.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட க்ளைமேக்ஸ் பற்றிய ரகசியம்! இவ்ளோ வலிகளுக்கு நடுவே எடுத்த காட்சியா அது?

ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் கடைசிவரை பார்த்துக் கொள்ளாமல் இறுதி கிளைமாக்ஸ் மட்டுமே பார்க்குமாறு கடிதத்திலே காதல் வளர்த்து உருவாக்கப்பட்டது காதல் கோட்டை திரைப்படம். அந்த காலத்தில் வித்தியாசமான கதை அம்சத்தில் வெளியான இப்படம் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. நல்ல வசூலையும் குவித்தது.

அஜித் குமார் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக காதல் கோட்டை அமைந்தது. முதலில் இப்படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் இணையவே மாட்டார்கள் என்றே அகத்தியன் எழுதி இருக்கிறார். ஆனால் சிவசக்தி பாண்டியன் தனக்கு நெகட்டிவ் கிளைமாக்ஸ் வேண்டாம் எனக் கூறிய பின்னரே இருவரும் பார்க்குமாறு கிளைமாக்ஸ் மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

இந்நிலையில் இப்படத்தில் முதலில் அஜித்தை இயக்குனர் தேர்வு செய்யவில்லை. அந்த நேரத்தில் முன்னணி இளம் நடிகராக இருந்த விஜயிடம் கதை சொல்லி இருக்கிறார். அப்போது கதை கேட்பது எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அவர் கதை கேட்டு பிடித்திருந்தாலும் கொஞ்ச நாள் காத்திருக்குமாறு கூறினாராம். உடனே ஷூட்டிங் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

அதற்கடுத்து படத்தில் சீரியல் ஆக்டர் அபிஷேக் நடித்திருக்கிறார். அவரும் பாதியில் படத்தில் இருந்தே விலகினார். இதை தொடர்ந்தே தன்னுடைய வான்மதி படத்தின் ஹீரோவான அஜித்தை வைத்து இப்படத்தினை இயக்கி இருக்கிறார் அகத்தியன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படம் காதல் கோட்டை என்றால் மறுக்க முடியாது.