Actor Simbu: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. இவரிடம் பல விஷயங்கள் இப்போது மாறினாலும் மாறாத ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எதையும் வெளிப்படையாக பேசுவது. அதனால் தனக்கு பிரச்சினையே வந்தாலும் மனம் திறந்து எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுபவர் சிம்பு.
இவருக்கு என ரசிகர் பட்டாளங்கள் அதிகமாகவே இருக்கின்றனர். ஆரம்பத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி இன்று ஒரு பெரிய நடிகர் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கின்றார் சிம்பு. இவருக்கு என தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. மாநாடு படத்திற்கு முன்பு வரை அவரது படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் அவருக்காக அவருடைய ரசிகர்கள் பக்க பலமாக இருந்தார்கள்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்ட சத்தியராஜ்!.. விக்ரமுல விட்டதை கூலில பிடிச்சிட்டார்!..
அதுவே சிம்புவின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. தன் தந்தையின் அறிமுகத்தில் வந்திருந்தாலும் இன்று தன் அப்பாவையே மிஞ்சிய ஒரு செல்வாக்கு உள்ள நடிகராக சிம்பு இருந்து வருகிறார்.இந்த நிலையில் அவர் நடித்த காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை அவருடன் நடித்த நடிகர் காதல் சுகுமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
காதல் அழிவதில்லை திரைப்படம் தான் சிம்பு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம். அந்த படத்தின் ஷூட்டிங் வைஷாக் நகரில் எடுக்கப்பட்டு கொண்டிருந்ததாம். அப்போது அங்கு ஒரு கிட்டார் இருப்பதைப் பார்த்த சுகுமார் அதை எடுத்து வாசிக்க தொடங்கி இருக்கிறார். அடிப்படையில் அவருக்கு கிட்டாரை பற்றி எதுவுமே தெரியாது.
இதையும் படிங்க: மோடியை மேடை ஏத்தியாச்சு! அடுத்ததா என்ன? சென்னை வந்ததும் ரஜினி நேரா எங்க போனார் தெரியுமா
அதை பார்த்ததும் சிம்பு ‘ஒரு விஷயம் பற்றி தெரிந்தால் மட்டுமே அதை பண்ண வேண்டும். தெரியலைனா சும்மா இருக்கணும்’ என பல பேர் முன்னாடி கிண்டல் செய்தாராம். இது சுகுமாருக்கு அவமானமாக தெரிந்திருக்கிறது. உடனே காதல் சுகுமார் ‘சிம்பு முன்னாடி இந்த கிட்டாரை எப்படியாவது வாசித்து காட்ட வேண்டும்’ என சபதம் மேற்கொண்டு சில மாதங்கள் கிட்டார் கிளாஸ் போய் நன்கு கற்றுக்கொண்டு மீண்டும் சிம்புவிடம் வந்து நின்றாராம். ‘சிம்பு இதை மட்டும் கேளுங்கள்’ எனக் கூறி காதல் அழிவதில்லை படத்தில் வரும் மாறா மாறா சுகுமாரா என்ற பாடலை கிட்டார் மூலம் வாசித்துக் காட்டி இருக்கிறார். அதை பார்த்ததும் சிம்பு மிகவும் ஆச்சரியப்பட்டு நின்னாராம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…