யோகிபாபு இப்படி சொல்லுவாருனு எதிர்பாக்கல!. காதல் விமல் பேட்டி...
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். அதன்பின் காணாமல் போய்விடுவார்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் எல்லாம் அந்த கேட்டகிரிதான். அதேபோல், சில நடிகர்கள் ஒரு காட்சியில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி விடுவார்கள். அதன்பின் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. எதாவது ஊடகம் அல்லது யுடியூப் சேனல்கள் அவர்களை தேடிச்சென்று பேட்டியெடுத்தால் மட்டுமே அவர்களின் நிலை பற்றி தெரிய வரும்.
அப்படி காதல் திரைப்படத்தில் ஒரே காட்சியில் டுபாக்கூர் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்கும் காட்சியில் நடித்தவர்தான் விமல். எந்த வேடம் என்றாலும் நடிக்க தயார் என சொல்வார். அந்த இயக்குனர் ‘எங்கே நடித்து காட்டு பாப்போம். நானே பயப்படனும்’ என சொன்னதும் அவர் காட்டும் நடிப்பை பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். வில்லன் - ஹீரோ குட் காம்பினேஷன். மனசுல வச்சுக்கிறேன் என அவர் சொன்னதும் ‘தெய்வம் சார் நீங்க’ என அவரின் காலில் விழுவார்.
அந்த காமெடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், விமலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. பார்ப்பதற்கு அடியாள் போல் இருந்ததால் சில படங்களில் சண்டை காட்சிகளில் மட்டும் நடித்தார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தபோது யோகிபாபு என்னை பார்த்து என்னிடம் பேசினார். நீங்கள் காதல் படத்தில் நடித்த விமல்தானே எனக்கேட்டுவிட்டு என்னை கேரவானுக்கு அழைத்து சென்றார். ‘உங்களை பார்த்து சில விஷயங்களை கற்றுக்கொண்டேன். நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில்தான் நான் இருக்கிறேன்’. நாம் இருவரும் இணைந்து நடிப்போம் என சொன்னார். நான் சினிமாவில் நடிக்கிறேனா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவர் அப்படி சொன்னதே எனக்கு பெரிய சந்தோஷம். உச்சத்தில் இருக்கும் அவர் அப்படி சொன்னதே எனக்கு போதும்’ என விமல் நெகிழ்ந்து பேசியிருந்தார்.