Connect with us

Cinema History

டெலிட்டான காதலன் படத்தின் மியூசிக்…. யோசிக்காமல் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம்…

ARRahman: படத்தின் தோல்விக்கு ஹார் டிஸ்க் மிஸ் ஆனது தான் காரணம் என இயக்குனர்கள் சொல்லிவரும் காலத்தில் ரீலிசாக இரண்டே நாள் இருந்த நிலையில் ஒரே நாள் இரவில் ஏ.ஆர்.ர ஹ்மான் செய்த தரமான சம்பவத்தில் படம் சூப்பர்ஹிட்டான சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

சமீபகாலமாக தோல்வி அடையும் படங்களின் இயக்குனர்கள் தங்களின் ஹாட் டிஸ்க், படத்தின் காட்சிகள் தொலைந்துவிட்டதாக தொடர்ந்து காரணத்தை அடுக்கி வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே ஜெயிக்க வேண்டும் என நினைப்பவர்கள். இந்த விஷயத்தினை எப்படி கையாளுவார்கள் என்பதை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ஒரு படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். அதன் பின் அவரின் வளர்ச்சி சொல்ல முடியாத அளவு சென்று ஆஸ்கார் நாயகனாக மாறியிருக்கிறார். பொதுவாகவே ஏ ஆர் ரகுமான் யாரிடமும் கோவப்படாமல் தனக்கு தேவையான வேலையை சரியான நேரத்தில் கேட்டு வாங்கிக் கொள்பவர்.

அது போன்ற ஒரு சம்பவம் காதலன் திரைப்படத்தில் நடந்திருக்கிறது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவான திரைப்படம் காதலன். இப்படத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு ஆகியோர் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

இப்படத்தின் வெற்றிக்கு கதையை விட பாடலே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் ஒரு பெரிய போராட்டத்தை தான் பட குழு தாண்டி வந்திருக்கிறது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் ரெண்டு நாட்களே இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் படத்தின் பின்னணி இசையை முடித்து சங்கருக்கு காட்ட தயாராகி இருக்கிறார்.

ஸ்டுடியோவில் அதைக் கேட்க சங்கரும் அமர்ந்திருக்கிறார். அந்த சமயத்தில் ரகுமானின் சவுண்ட் இன்ஜினியர் எச் ஸ்ரீதர் தவறுதலாக ஒரு பட்டனை அழுத்த மொத்த பின்னணி செய்யும் அழிந்து விட்டதாம். ஒன்று கூட கிடைக்காமல் போக படக்குழு செய்வதறியாமல் தவித்து நின்று இருக்கின்றனர்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் கொஞ்சமும் யோசிக்காமல் நேரடியாக போய் தொழுது விட்டு வந்திருக்கிறார். உடனே தனக்கு ஞாபகமான மியூசிக்கை வைத்து மொத்த பின்னணி செய்யும் ஒரே நாள் இரவில் இசையை முடித்து சங்கர் கையில் கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது. அதன்பின் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கலை… அவ்வளோ கூட்டம்…கேரளா சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாருப்பா…

google news
Continue Reading

More in Cinema History

To Top