கைதிக்கும் விக்ரமிற்கும் கனெக்ட் உண்டு !- அடுத்து வேற மாதிரி போகப்போகுதோ?
இந்தியா முழுக்க நாளை 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் விக்ரம் ஆகும். ட்ரைலர்களில் துவங்கி பாடல்கள் வரை அனைத்து விஷயங்களும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மக்களிடையே அதிகப்படுத்தியுள்ளன.
படத்தின் இறுதி காட்சிகளில் சூர்யா வருகிறார், அவரை வைத்து விக்ரமின் அடுத்த பாகத்திற்கு ப்ளான் செய்யப்பட்டுள்ளது என கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த ஒரு பேட்டியில் கமல் கூறியிருந்தார்.
விக்ரமின் ஸ்பெஷன் ஸ்கீரினிங் பார்த்த பலரும் படம் பிரமாதமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் கூறும்போது விக்ரம் மூன்று பாகங்களை கொண்டது என கமல் கூறியிருந்தார். சூர்யா மூன்றாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் கைதிக்கும் விக்ரம் திரைப்படத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கைதி படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் விக்ரம் படத்தில் க்ராஸ் ஓவர் ஆவதாக தகவல்கள் வந்துள்ளன.
எனவே முதல் பாகம் கைதியாக இருக்கலாம், இரண்டாம் பாகம் விக்ரமாகவும், மூன்றாம் பாகம் சூர்யாவின் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.