ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கைதி’ திரைப்படம்!..ஆனா இயக்கப்போவது லோகேஷ் இல்ல!..அங்கதான் ட்விஸ்ட்!..
தமிழில் ஒரே நைட்டில் ஒட்டு மொத்த படத்தையும் காட்டி ஸ்கிரீன் ப்ளேயில் ஒரு வித்தியாசத்தை புகுத்தி நல்ல கதையம்சத்தோடு வெளிவந்த படம் ‘கைதி’. இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடித்திருப்பார்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க படம் வித்தியாசமான அணுகுமுறையில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபகாலமாகவே தமிழில் வெற்றிபெரும் படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு தயாராகி வருகின்றன.
இதையும் படிங்க : உங்க படத்திற்கு இசையமைக்க முடியாது!..காரணம் கேட்ட எம்ஜிஆரை மூக்குடைத்த எம்.எஸ்.வி!..
ஏற்கெனவே சூர்யாவின் சூரறை போற்று திரைப்படம் ஹிந்தியில் தயாராகி வருகின்றது. இந்த நிலையில் கைதி திரைப்படமும் தயாராகி வருகின்றன. ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஆனால் லோகேஷ் இந்த படத்தை இயக்கவில்லையாம்.
அஜய் தேவ்கானே இந்த படத்தை இயக்குகிறாராம். இன்னொரு விஷயம் என்னவெனில் தமிழில் கார்த்திக்கு ஹீரோயினே இல்லாத நிலையில் ஹிந்தியில் நடிகை தபு மற்றும் அமலாபால் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் நரேன் நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் தபு நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.