குழந்தை பிறந்தும் அடங்கலயே...! மல்லாக்க படுத்து நீட்டி போஸ் கொடுக்கும் காஜல்...
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை காஜல். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக அறிமுகமானார். ஆனால் சினிமாவில் முதலில் காலடி எடுத்து வைத்தது ஹிந்தி படம் மூலம் தான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம்சரண் நடித்த மகதீரா படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. விஜய்யுடன் தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து ஹிட் கொடுத்தார். சினிமாவில் உச்சம் தொட்ட நடிகையாகவே மாறினார். பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார். அதன்பிறகு துல்கர் சல்மான் நடித்த ஹேய் சினாமிகா படத்தில் ஒரு லீடு ரோலில் நடித்து அசத்தினார். இந்த சந்தர்பத்தில் தான் கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. திரைப்பிரபலங்கள் சிலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவர் கர்ப்பமாக இருக்கும் போதே ஏகப்பட்ட போட்டோ சூட்டுகளை எடுத்து இணையத்தில் பரப்பி வந்தார். இப்பொழுது குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சி உடைகளை அணிந்து விதவிதமான போஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ஒரு கட்டிலில் மல்லாக்க படுத்து கால் தொடை தெரியுற மாதிரியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குழந்த பிறந்து பல நாள்கள் ஆனாலும் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் கடந்திருக்கும்.அதுக்குள் இப்படியா? என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.