கல்யாணம் ஆகியும் கிளாமர் குறையலையே?-சிகப்பு உடையில் சிக்கென போஸ் கொடுத்த காஜல்!!
தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம்வந்தவர் நடிகை காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் கோமாளி. அதன்பின் தமிழில் இவருக்கு இந்தப்படமும் வெளியாகவில்லை.
ராஜமௌலி இயக்கிய மஹதீரா என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் காஜல் அகர்வால். அதற்கு முன்னதாகவே இவர் தமிழில் பழனி, மோதி விளையாடு, பொம்மலாட்டம் என சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த இந்தப்படமும் சரியாக ஓடவில்லை.
மஹதீரா படம் தமிழில் டப் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பின் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்தார் காஜல். கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கோமாளி படம் வெளியானது, அதன்பின் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.
திருமணத்திற்குப் பின்னரும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிகப்பு நிற சேலையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்தப்படத்தில் இவரது அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கல்யாணம் ஆகியும் இவரது கவர்ச்சி குறையவில்லை என்று கமெண்ட் செய்துள்ளனர் ரசிகர்கள்.
தற்சமயம் காஜல் தமிழில், இந்தியன் 2, ஹே சினாமிகா, பாரிஸ் பாரிஸ் உட்பட 5 படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பின்னரும் இவர் காட்டில் அடைமழைதான்.