காஜல் அகர்வாலுக்கு இனி இடம் இல்லை.. என்ன நடந்தது தெரியுமா?

கடந்த 2010ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'எந்திரன்' படத்திற்குப் பின் அவர் இயக்கத்தில் வெளியான இந்தப்படமும் சரியாக ஓடவில்லை. இதையடுத்து கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ஷங்கர்.
எனவே 1996ல் அவர் கமலை வைத்து இயக்கிய மெகா ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என பிளான் செய்தார். இதற்கான வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது.
இதில் கமலுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வந்தனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானை நீக்கிவிட்டு இதில் இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்தார் ஷங்கர்.

kajal agarwal
படப்பிடிப்பு தொடங்கிய சிறிது நாளிலே, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஷங்கருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக படப்பிடிப்பு ஓராண்டு காலமாக தடைபட்டுள்ளது.
ஒருவழியாக நீண்ட இழுபறிக்குப்பின் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. இதற்கிடையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக உள்ளதால் அவரால் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை.
இதன்காரணமாக அவரை இந்த படத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம். அவருக்குப்பதிலாக வேறு எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என யோசித்து வருகிறது படக்குழு.