கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் - புத்தாண்டில் அறிவித்த குட் நியூஸ்!
கணவருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து கூறி குட் நியூட் சொன்ன காஜல் அகர்வால்!
இந்திய திரைப்பட நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் என்ற திரைப்படத்தில் நடித்து 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அந்த பிறகு சில நாட்கள் ஹிட் படங்கள் கொடுக்காமல் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதன் பிறகு நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் நடிகையாக மார்க்கெட்டின் முன்னணி இடத்தைப்பிடித்தார்.
இதையும் படியுங்கள்: உள்ளயும் ஒன்னு போடலாம் இல்ல!. கண்கூசும் கவர்ச்சியில் ரகுல் ப்ரீத் சிங்….
இதையடுத்து கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். காஜல் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளிய துவங்கியது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தனது கணவருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்து சொன்ன புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியாகி விட்டது.