Connect with us
saravana store

இனி மூடி மறைக்க முடியாது- கர்ப்பமான செய்தியை வெளியிட முடிவு செய்த பிரபல நடிகை

Cinema News

இனி மூடி மறைக்க முடியாது- கர்ப்பமான செய்தியை வெளியிட முடிவு செய்த பிரபல நடிகை

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால்தான் படங்களிலிருந்து வெளியேறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் அவரே இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.

தென்னிந்தியத் திரைப்படத்தில் முக்கிய நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், கடந்த ஆண்டு கவுதம் கிச்லு என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் நடிக்க இருந்த தி கோஸ்ட் என்ற படத்திலிருந்து வெளியேறினார். இதற்குக் கர்ப்பம் தான் காரணம் எனக் கடந்த சில வாரங்களாகத் தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில், காஜல் அகர்வால் தனது சமூக வலைதளபக்கத்தில், “விரைவில் முக்கிய அறிவிப்பு வரும் காத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார் எனத் தெரிகிறது. ஒரு பக்கம் சமந்தாவின் விவகாரத்துச் செய்தியும், மறு பக்கம் கஜால் அகர்வாலின் கர்ப்ப செய்தியும் தெலுங்கு திரையுலகில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top