கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..

 
கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!..
பொதுவாக சினிமா உலகில் இருக்கும் பெண்களுக்கு பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பாக பாலியல் சீண்டல்களை தாண்டி அவர்கள் அதில் சாதிக்க வேண்டும். சினிமா துவங்கியது முதல் பெண்கள் நடித்து வருகிறார்கள். பல பெண்கள் பெரிய சாதனையெல்லாம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையில் குறையவில்லை. மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். 15 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர். இத்தனைக்கும் இவருக்கு தமிழ் தெரியாது. ஆனாலும், விஜய், அஜித் என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!.. kajal agarwal விஜயுடன் துப்பாக்கி மற்றும் மெர்சல் படங்களிலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். மேலும், சூர்யாவுடன் மாற்றான், ஜெயம்ரவியுடன் கோமாளி, தனுஷுடன் மாரி, நான் மகான் அல்ல மற்றும் அழகு ராஜா போன்ற படங்களில் கார்த்தியுடனும் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பலான படங்கள் ஹிட் அடித்திருக்கிறது. 2020ம் வருடம் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணமான பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சி புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். கேரவானுக்குள் வந்து சட்டையை கழட்டிய இயக்குனர்!.. உறைந்து போன காஜல் அகர்வால்!.. சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு உதவி இயக்குனர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் பற்றி பேசியிருக்கிறார். ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் கேரவானில் நான் இருந்தேன். அப்போது ஒரு உதவி இயக்குனர் என் அனுமதி இல்லாமலயே கேரவானுக்குள் வந்துவிட்டார். அதோடு, சட்டையை கழட்டினார். அவரின் நெஞ்சில் என் பெயரை பச்சைக்குத்தி வைத்திருந்தார். அதை காட்டுவதற்காகவே அவர் சட்டையை கழட்டினார். ஆனால், நான் பயந்துவிட்டேன். அவர் என் தீவிரமான ரசிகராக இருந்தாலும் அப்படி நடந்து கொண்டது மிகவும் தவறு. அவர் அப்படி நடந்துகொண்டது எனக்கு பிடிக்கவில்லை’ என காஜல் அகர்வல் பேசி இருந்தார்.

From Around the web