
Cinema News
நீங்க பண்ணுவீங்கனு நினைக்கவே இல்ல… காஜலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்….!
கோலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். விஜய் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த காஜல் திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தற்போது சினிமாவை விட்டு விலகியுள்ளார்.
இவருக்கு சமீபத்தில் தான் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது குழந்தையுடன் முதல் அன்னையர் தினத்து கொண்டாடிய காஜல் அகர்வால், முதன் முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருந்தார்.
புகைப்படத்தை மட்டுமல்லாமல் அதோடு சேர்த்து ஒரு அன்னையர் தின கவிதையையும் காஜல் கேப்ஷனாக போட்டிருந்தார். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பமானது. ஆமாங்க உண்மையில் அந்த கவிதை காஜல் எழுதிய கவிதையே கிடையதாம்.
அதன்படி சாரா என்பவர் எழுதிய கவிதையை தான் காஜல் காப்பி அடித்து அவரது கவிதை போல் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இதனை கண்ட சாரா, “அது என்னுடைய கவிதை. எனக்கு கிரெடிட் கொடுக்குமாறு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்” என சோசியல் மீடியாவில் பதிவு செய்திருந்தார்.
அடுத்த நொடியே காஜல் கவிதையை திருடியதாக நெட்டிசன்கள் டிரோல் செய்ய தொடங்கியதால், உஷாரான காஜல் உடனடியாக அவருடைய பதிவை எடிட் செய்து சாராவுக்கு கிரெடிட் கொடுத்தார். இருப்பினும் ஒரு பெரிய நடிகையாக இருக்கும் நீங்கள் அடுத்தவர் கவிதையை காப்பி அடிக்கலாமா என அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.