இப்படியா இருந்தீங்க...? முதல் முறையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்ட மெர்சல் பட நாயகி..!
தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் . அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது.
பின்னர் தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு தமிழ் , தெலுங்கு, இந்தி என பாலா மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
அதன் பிறகு கொஞ்ச நாள் நடிப்பின் பக்கம் வராமலிருந்தார். இதையடுத்து கர்ப்பம் ஆனார். கர்ப்ப காலத்தில் பெண்கள் எல்லாரும் கடைப்பிடிக்கக் கூடிய ஒன்று உடற்பயிற்சி.இவரும் தான் கருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் இப்பொழுது பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோ: https://www.instagram.com/reel/Cag262RBpRm/?utm_source=ig_web_copy_link