Kakka Radhakrishnan: பல நடிகர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த பெருமைக்குரியவராக இருந்தவர் நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். ஆனால் அவருடைய ஆரம்ப சினிமா வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அவரும் மிகவும் கஷ்டப்பட்டு பல இன்னல்களை கடந்து தான் இந்த சினிமா துறைக்கு வந்திருக்கிறார்.
சிவாஜியை நாடக மேடையில் அறிமுகப்படுத்தியவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன். அதன் காரணமாகவே காக்கா ராதாகிருஷ்ணனுக்கும் சிவாஜிக்கும் நல்ல ஒரு நெருக்கமான நட்பு இருந்து வந்தது. பல நாடகங்களில் இருவரும் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: நீங்க மாலை போட்டா நாங்க சாமி படமா எடுப்போம்?!. இளையராஜாவை காலாய்த்த பாக்கியராஜ்!..
காக்கா ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் முக்கியமான இருவரை பற்றி ஒரு பேட்டியில் அவரே கூறி இருக்கிறார். ஒருவர் என். எஸ். கிருஷ்ணன் இன்னொருவர் எம்ஜிஆர். காக்கா ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர்களில் என். எஸ். கிருஷ்ணன் மிகவும் முக்கியமானவராம்.
எம்ஜிஆரை பற்றி குறிப்பிடும் போது எம்ஜிஆர் உடன் சேர்ந்து ஒரு படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்தப் படத்திற்கு காக்கா ராதாகிருஷ்ணன் வாங்கிய சம்பளம் 3000 ரூபாயாம். எம்ஜிஆர் காக்கா ராதாகிருஷ்ணனிடம் உனக்கு எவ்வளவு சம்பளம் என கேட்க அதற்கு காக்கா ராதாகிருஷ்ணன் 3000 என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: இப்படி மொக்கை வாங்கிட்டீங்களே கோபி!… ஆஜரான மினிஸ்டர்…பாக்கியா ஹாப்பி அண்ணாச்சி…
உடனே அந்தப் படத்தின் தயாரிப்பாளரை அழைத்த எம்ஜிஆர் இவருக்கு 5000 ரூபாய் சம்பளம் கொடுக்குமாறும் அந்த 2000 ரூபாயை என் சம்பளத்திலிருந்து கொடுக்குமாறும் கூறினாராம் எம்ஜிஆர். காக்கா ராதாகிருஷ்ணனின் மார்க்கெட் உயர எம்ஜிஆர் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
அதேபோல் கமல்ஹாசனை பற்றி குறிப்பிட்ட காக்கா ராதாகிருஷ்ணன் என் சினிமா வாழ்க்கையில் எனக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் தேவர் மகன். அந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அப்படி ஒரு கேரக்டரை கமல்ஹாசன் மட்டும் எனக்கு கொடுக்கவில்லை என்றால் என்னுடைய கெரியர் எங்கே போயிருக்கும் என்று தெரியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜியுடன் நடிக்கவே மாட்டேன்!.. கறார் காட்டிய நடிகர்!.. அப்படி என்ன காரணம்?!..
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…