டான்ஸ் ஆடுனதெல்லாம் போதும்.. நடிப்பதற்கு வந்த பிரபல நடன இயக்குநர்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் நடன இயக்குனர்கள் கதாநாயகர்களுடன் அறிமுகப்பாடலில் நடனமாடுவதுண்டு. மிகவும் அரிதாக ஒருசில நடன இயக்குநர்கள் கதாநாயகர்களாகவும், கதாநாயகியாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் நடிப்பதுண்டு.
அந்தவகையில் தற்போது கலா மாஸ்டர் நடிப்பதற்கு வந்துள்ளார். கலா மாஸ்டர் உடன் பிறந்தவர்கள் ஏழு பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் நடன இயக்குநர்களாகவே உள்ளனர். நடன இயக்குநராக இருந்த கலா மாஸ்டர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் நன்கு பரிச்சயமானவர்.

kala master
அதிலும், குறிப்பாக இவர் பயன்படுத்தும் 'கிழி கிழி கிழி' என்ற வார்த்தை மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போடும் வகையில் அமைந்தது. இதுவரை நடன இயக்குனராக மட்டுமே இருந்துவந்த இவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார்.
அந்தவகையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் கலா மாஸ்டர். இதில் விஜய் சேதுபதிக்கு அத்தையாக இவர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.