அந்த விஷயத்துல நான் கார்த்திக்குக்கு அடிமை!.. அட இதை சொன்னது யார் தெரியுமா?...

kar
Actor Karthick: தமிழ் சினிமாவில் 90களில் பெண்களை அதிகம் கவர்ந்த நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தன் சினிமா அறிமுகத்தை தொடங்கினார் கார்த்திக். ஆனால் அந்தப் படத்தில் நடிக்க வந்தது ஒரு விபத்து என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் ஹீரோவை தேடிக் கொண்டிருந்த போது பாரதிராஜாவின் கண்ணில் எதேச்சையாக தெரிந்தவர் கார்த்திக். அதன் பிறகு முத்துராமன் மகன் என்று தெரிந்ததும் அவரை அணுக அதிலிருந்து ஆரம்பமானது அவரது சினிமா கெரியர்.
இதையும் படிங்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கே இது 2வது கல்யாணம்!.. பிரபு வீட்ல நடந்த பஞ்சாயத்து.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்..
இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் அவரால் பயணிக்க முடிந்ததா என்றால் இல்லை. இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்த போது ஒரு கம்பேக் படமாக வந்ததுதான் ரஜினி நடித்த நல்லவனுக்கு நல்லவன் என்ற படம். அந்தப் படத்தில் ரஜினிக்கு மருமகனாக நடித்திருப்பார் கார்த்திக்.
அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றார் கார்த்திக். 80, 90கள் காலத்தில் இருந்த பல முன்னணி நடிகைகளின் கனவு நாயகனாகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டரான கலாவிடம் எந்த நடிகர்களின் டான்ஸ் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏலே இதுக்கெல்லாம் விவகாரத்தா..? ஐஸ்வர்யா வீட்டுல கூட இந்த பிரச்னை தானாம்… சுத்தம்..!
அதற்கு கலா மாஸ்டர் கார்த்திக் நடனத்திற்கு நான் அடிமை என்று பதில் கூறினார். செட்டுக்குள் வரும் போதே ஹாய் டார்லிங் என்று சொல்லிக் கொண்டே தான் மிக ஜாலியாக வருவார். அதே நேரத்தில் அவர் டான்ஸில் ஒரு குறும்பு, சுட்டி ஆகியவை நிறைந்திருக்கும்.
எனக்கு மட்டுமில்லாமல் அப்போது இருந்த எல்லா நடிகைகளுக்கும் பிடித்தமான நடிகராக கார்த்திக் இருந்தார் என்று கலா மாஸ்டர் கூறினார். ஆனால் சமீபகாலமாக அவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பொது இடங்களில் அவரை பார்க்க முடியவில்லை. திரையுலகினர் சில பேருக்கும் அவரை பற்றி சரியான விவரம் தெரியவில்லை என்று தான் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…