“இதுவல்லவா சாதனை”.. தந்தை மறைந்த 9 ஆண்டுகளில் அவரின் கனவை நனவாக்கிய கலாபவன் மணியின் மகள்!

Published On: April 15, 2025
| Posted By : Giri

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் கலாபவன் மணி 2016 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி திடீரென மரணம் அடைந்தார். திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகிலுள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியபோது அவர் மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார். அவர் இறந்தபோது வயது
கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள்.

உடற்கூறாய்வில், அவரது உடலில் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதன் பின்னர், இந்த வழக்கு CBIக்கு ஒப்படைக்கப்பட்டது. CBI, கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளித்த 35 பக்க அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று தெரிவித்தது.

அதில், “கலாபவன் மணி ஒரு நாளுக்கு 12-13 பாட்டில்கள் பீர் குடிப்பது வழக்கம். அவர் அருந்திய பீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சிறிய அளவு மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல் பாதிப்பு இருந்தும் அவர் தொடர்ந்து குடித்ததால், தனது மரணத்தை அவரே தேடிக்கொண்டார்” என்று கூறப்பட்டிருந்தது.

கலாபவன் மணி மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை தானடி அவரது குடும்பத்தையும் மிக அதிகமாக பாதித்திருந்தது. கலாபவன் மணிக்கு திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகள் உள்ளார். மணியின் மறைவுக்குப் பிறகு, அவர் கட்டிய வீட்டில் அவரது மனைவி தனது மகள் மற்றும் பெற்றோருடன் தங்கியிருந்தார். பின்னர் தனது பெற்றோரை தனது சகோதரியின் பராமரிப்பில் விட்டுவிட்டு மகளுடன் எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்தார். ஸ்ரீலட்சுமியும் அவரது அம்மாவும் விடுமுறை நாட்களில் மட்டுமே கலாபவன் மணி கட்டிய வீட்டு சென்றுவந்தனர்.

இந்தநிலையில் தான், மணி இறந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகளை தொடர்பு கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்தபோதிலும், இருவரும் பிரபலத்திலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, மணியின் ஒரே மகள் ஸ்ரீலட்சுமி இப்போது எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருவது தெரியவந்துள்ளது.

கலாபவன் மணி உயிருடன் இருக்கும்போது ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்ட வேண்டும், தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற தனது கனவைப் பற்றி அடிக்கடி பேசுவார். தந்தையின் இந்த கனவை நனவாக்கும் அவர் மறைந்த பின்னர் ஸ்ரீலட்சுமி மருத்துவராகி இருப்பது நெகிழவைத்திருக்கிறது.