போற இடமெல்லாம் வாய்விட்டா இதான் கதி… தனக்கு தானே வேட்டு வைத்துக்கொண்ட உதயநிதி…
நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் என பல பரிமாணங்களில் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார். அவர் அளிக்கும் பேட்டிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த அளவுக்கு மிகவும் வெளிப்படையாக பல திரைப்படங்களை விமர்சித்து பேசி வருகிறார்.
மனசாட்சியே இல்லை
உதாரணமாக சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் ஆர்யா நடித்த “கேப்டன்” திரைப்படத்தை குறித்து மிகவும் நகைச்சுவையாக பேசினார். “கேப்டன் படம் Predator படத்தை விட நன்றாக இருக்கும் என கூறி ஆர்யா அந்த படத்தை என் தலையில் கட்டிவிட்டார். படத்தை பார்த்துவிட்டு நொந்துபோய்விட்டேன்.
அதன் பின் ஒரு நாள் ஆர்யாவை சந்தித்தபோது ‘மனசாட்சியே இல்லையா? இதுக்கு Predator படத்தை அப்படியே எடுத்து வச்சிருக்கலாமே” என்று கேட்டன்” என கூறினார். “கேப்டன்” திரைப்படத்தை வெளியிட்டதே உதயநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங்கு போகல
மேலும் அப்பேட்டியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “சைக்கோ” திரைப்படத்தை குறித்த ஒரு தகவலை நகைச்சுவையாக பகிர்ந்திருந்தார். “சைக்கோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு போய்விட்டேன். ஆதலால் நான் பல நாட்கள் படப்பிடிப்பிற்கே செல்லவில்லை. அதில் பல காட்சிகளில் நடித்தது என்னுடைய டூப்தான்” என மிகவும் வெளிப்படையாக கூறினார்.
சிரிப்பே வரலை
சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பேட்டியில் “டான் திரைப்படத்தை பார்த்தபோது எனக்கு சிரிப்பே வரவில்லை. இந்த படம் கண்டிப்பாக ஓடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் படம் ஹிட் அடித்து விட்டது” என உதயநிதி கூறினார்.
இவ்வாறு சமீபத்திய பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறியதன் மூலம் இணையவாசிகளால் மிகவும் ரசிக்கப்படும் நபராக உதயநிதி திகழ்ந்து வருகிறார். ஆனால் இந்த வெளிப்படைத்தன்மையின் மூலம் “கலகத் தலைவன்” படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
கலகத் தலைவன்
கடந்த 18 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின், நித்தி அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கலகத் தலைவன்”. இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது. ஆனால் இத்திரைப்படம் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியை ஓரங்கட்டிய உலக நாயகன்… ஆனால் வெளிப்பட்டதோ மக்கள் செல்வனின் பெருந்தன்மை… என்ன மனுஷன்யா!!
ஒரு கோடி கூட வராது
“எல்லா திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் வெளிப்படையாக விமர்சிக்கிறார். அது பலருக்கும் பெரிய சங்கடத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது அவர் நடித்த திரைப்படத்தையும் கூட அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்கிறார்.
சமீபத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தை பற்றி அவர் கூறும்போது மகிழ் திருமேனி இதற்கு முன் இயக்கிய தடம் திரைப்படம் அளவுக்கெல்லாம் இத்திரைப்படத்தை எதிர்பார்க்காதீர்கள் என கூறினார். உதயநிதி இவ்வாறு கூறியது கலகத் தலைவன் திரைப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கலகத் தலைவன் திரைப்படத்தின் தமிழ் நாடு வசூல் ஒரு கோடியை கூட தாண்டாது என்று தகவல் வருகிறது” என அப்பேட்டியில் அந்தணன் கூறியுள்ளார்.