கலைஞர் வசனத்துல என்னதான் ஸ்பெஷல்..? பராசக்தில யாராவது இதைக் கவனிச்சீங்களா?

kalaignar parasakthi sivaji
எம்ஜிஆர், சிவாஜியின் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியுள்ளார். எல்லாமே மிகச்சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு ஒரே ஒரு உதாரணமாக பராசக்தியைச் சொல்லலாம். வாங்க என்னன்னு பார்க்கலாம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். அந்தப் படத்தின் வெற்றியில் அவருக்கு முழு பங்கு உண்டு. கலைஞர் கருணாநிதி அந்தப் படம் முழுக்க சிறப்பாக வசனம் எழுதி இருந்தார். இருந்தாலும் அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அந்தப் படத்தின் உச்சக்கட்டத்தில் வரும் நீதிமன்றக் காட்சிதான். அனல் பறக்க வசனம் எழுதி இருந்தார்.
அதற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் சிவாஜி பேசி மிகச்சிறப்பாக நடித்து இருந்தார். அப்படிப்பட்ட வசனம் எழுதிய கருணாநிதிக்கு அப்போ வயசு 28. அப்படி எழுதிய வசனத்தை அற்புதமாக பேசிய சிவாஜிக்கு அந்தப் படத்தில் நடிக்கும்போது வயது 24. எல்லா எழுத்தாளர்களும் காசுக்குத்தான் எழுதுவாங்க.
ஆனால் கலைஞர் தான் எழுதிய எழுத்துக்களில் எப்படியாவது தன்னோட கொள்கையை சாமர்த்தியமாக சேர்த்துவிடுவார். அதனால்தான் அவர் வசனம் எழுதிய பல படங்களில் அவர் தனியாகத் தெரிந்தார் என்று ஒரு கட்டுரையில் நடிகர் சிவக்குமார் பதிவு செய்துள்ளார்.
1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி. பி.ஏ.பெருமாள் முதலியார் தயாரித்துள்ளார். திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. படத்திற்கு ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார்.
சிவாஜியுடன் இணைந்து எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்எஸ்ஆர், ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் அத்தனைப் பாடல்களும் ஹிட். குறிப்பாக தேசம் ஞானம் கல்வி, நெஞ்சு பொறுக்குதில்லையே, புதுப்பெண்ணின், காகாகா, ஓ ரசிக்கும் சீமானே ஆகிய பாடல்களை ரசிக்கலாம்.

இந்தப் படத்தின் வெற்றி இன்று வரை பேசப்படக் காரணம் படத்தில் கலைஞரின் வசனமும், சிவாஜியின் நடிப்பும் தான். இதே பெயரில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தப் படமும் வரும் பொங்கலையொட்டி விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்குப் போட்டியாக ரிலீஸ் ஆகிறது.