தயாராகிறது கலைஞர் மு.கருணாநிதியின் பயோபிக்… டைரக்டர் யார்ன்னு தெரிஞ்சா ஷாக் அகிடுவீங்க!!

Published on: December 29, 2022
Kalaignar Karunanidhi
---Advertisement---

தமிழக அரசியலின் திராவிட இயக்க பாரம்பரியத்தில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர் கலைஞர்.மு.கருணாநிதி. பகுத்தறிவு சிந்தனையின் முன்னோடிகளான பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் தெற்கில் இருந்து உதித்த சூரியனாய் திகழ்ந்தவர் கலைஞர்.

“கத்தியை விட பேனா முனை கூர்மையானது” என்ற பழமொழிக்கு உதாரணமாய் வாழ்ந்தவர் இவர். அந்தளவுக்கு தனது எழுத்தாற்றலால் பலரின் வாழ்க்கையில் விடியலாக திகழ்ந்தவர்.

Kalaignar Karunanidhi
Kalaignar Karunanidhi

கலைஞர் மு.கருணாநிதி தனது சிந்தனைகளை திரைப்பட வசனங்களின் மூலம் மக்களுக்குப் பரப்பினார். கலைஞரின் சிந்தனை தெறிக்கும் வசனங்கள் நிறைந்த “பராசக்தி” திரைப்படத்தை நம்மால் எளிதில் மறக்கவே முடியாது.

“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காகவா? இல்லை; கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்” என்ற “பராசக்தி” வசனம் இப்போதும் பொருந்திப்போகிற வசனமாக திகழ்ந்து வருகிறது.

Kalaignar
Kalaignar

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்ற கலைஞர், பல எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் தடைகளையும் கடந்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிடித்த முதல்வராக திகழ்ந்தார். அவரது தமிழுக்கு இந்த தமிழ்நாடே அடிமையாக இருந்தது என்று கூட சொல்லலாம்.

எதிரிகள் கடுமையான விமர்சனங்களை ஏவுகணையில் அனுப்பினாலும், பூ கொடுத்து அதனை வரவேற்கும் தன்மை உடையவர் கலைஞர். எந்த ஒரு கேள்விக்கும் மிகவும் சாமர்த்தியமாக பதில் கூறும் வல்லமை படைத்தவராகவும் திகழ்ந்தார்.

தமிழை செம்மொழியாக அறிவித்தபோது, ஆட்சி பொறுப்பில் இருந்த கலைஞர், தமிழின் பெருமையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தினார்.

Kalaignar
Kalaignar

இவ்வாறு தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் அயராது பாடுபட்ட கலைஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் இந்த உலகை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம்.

இதையும் படிங்க: அஜித்துக்கு ஆப்பு வைக்க போட்டி நடிகரின் ஆட்கள் போட்ட பிளான்!.. இவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்களேப்பா!.

Vetrimaaran
Vetrimaaran

மேலும் இத்திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குனர் வெற்றிமாறனிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். சில நாட்களுக்கு முன் தமிழகத்தின் தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை திரைப்படமாக உருவாக உள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது கலைஞரின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.