கலைஞரிடம் ஆசையாக கேட்ட பிரபு.. உதவிக்கு வந்த நடிகர் திலகம்!. நடந்தது இதுதான்!...

Actor prabhu: எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக திரையுலகில் அறிமுகமானவர்தான் கலைஞர் கருணாநிதி. அதன்பின் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களுக்கு வசனம் எழுதினார். அதேபோல், சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கும் கதை, வசனம் கலைஞர் கருணாநிதிதான். அந்த படம்தான் கருணாநிதியை வசனகர்த்தாவாக ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின் பல படங்களிலும் கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார். அவரின் வசனங்களை பேசி நடித்த நடிகர்கள் பலர். 80களில் கருணாநிதி வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்கிற ஆசை பல நடிகர்களுக்கும் இருந்தது. அதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் ஒருவர்.

இதையும் படிங்க: விஜயுடன் சேர்ந்து நடிப்பேன்.. ஆனா ஒரே கண்டிஷன்!.. பல வருடங்களுக்கு முன்பே பதில் சொன்ன அஜித்..

பாலைவன ரோஜாக்கள் படத்தில் அந்த வாய்ப்பு பிரபுவுக்கு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் அவருக்கு அதிக வசனங்கள் இல்லை. இதனால் ஏமாந்துபோன பிரபு கலைஞரிடம் சென்று ‘உங்கள் வசனங்களை பேசி நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். ஆனால், படத்தில் எனக்கு பெரிய வசனங்கள் இல்லை’ என சொல்லியிருக்கிறார்.

அதற்கு கலைஞர் ‘கவலைப்படாதே.. உனக்காகவே ஒரு படம் எழுதுகிறேன்’ என சொல்லியிருக்கிறார். அப்படி உருவான திரைப்படம்தான் காவலுக்கு கெட்டிக்காரன். சந்தானபாரதி இயக்கிய படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தது கருணாநிதிதான். இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருப்பார். 1990ம் வருடம் இந்த படம் வெளியானது.

இதையும் படிங்க: அப்போ ‘கோட்’ படத்திலும் அந்த சீன் இருக்கும்! முத்தக்காட்சி பற்றி நடிகை வெளியிட்ட பதிவு

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபு நடித்திருப்பார். ஆனால், போலீஸ் வேலை பார்ப்பது அவருக்கு பிடிக்காது. அதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை செய்வார். ஒருகட்டத்தில் வில்லன் செய்வதை பார்த்து கோபப்பட்டு அதிரடி போலீஸ் காரணாக மாறி துவம்சம் செய்வார்.

பிரபுவை அழைத்த கருணாநிதி ‘இந்த படத்தில் நீ நாடகத்தில் நடிப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. அதில், நீ ஆசைப்பட்டது போல வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த வசனங்களை உன் அப்பாவிடம் கொடுத்து அதை அவர் எப்படி பேசி காட்ட சொல்லி அதை ரெக்கார்ட் செய்து பலமுறை அதைக்கேட்டு பின்பு நடி’ என சொன்னார். பிரபுவும் அப்படியே செய்தார். அதன்மூலம் அப்பாவை போல கலைனர் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்கிற பிரபுவின் ஆசையும் நிறைவேறியது.

இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

 

Related Articles

Next Story