பாம்பு நிச்சயமாக நன்றாகவே படம் எடுக்கும்- சிவாஜி பட இயக்குனரை வித்தியாசமாக பாராட்டிய கலைஞர்… வேற லெவல்!

Kalaignar and Sivaji Ganesan
முத்தமிழ் அறிஞர் என்று போற்றப்படும் கலைஞரின் தமிழ் பேச்சுகளை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. தமிழ் சொற்களில் இப்படி எல்லாம் புகுந்து விளையாடலாமாஎன ஆச்சரியப்படுத்துவிடுவார் கலைஞர். அந்தளவுக்கு மிகவும் தனித்துவமான அழகு தமிழ் வார்த்தைகளை சரளமாக உபயோகித்து மிகவும் சுவாரஸ்யமாக பேசக்கூடியவர். அவரது தமிழ் சொற்பொழிவை எதிர்கட்சியை சேர்ந்தவர்களே விரும்பி கேட்பார்கள் என கூறப்படுவது உண்டு. மிகவும் ஆழ்ந்த தமிழாற்றல் கொண்டவராக திகழ்ந்தார் அவர்.

AP Nagarajan
எதிராளியை விமர்சிக்கும் போது கூட மிகவும் நகைச்சுவையாக பேசி எதிராளியையே வாயடைக்க வைத்துவிடுவார். அப்படி இருக்கும்போது ஒரு முறை பழம்பெரும் இயக்குனராக ஏ.பி.நாகராஜனுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் ஏ.பி.நாகராஜனை மிகவும் வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் பாராட்டி அங்கிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தினார். அந்த நிகழ்வை குறித்து இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வந்தவர். “நவராத்திரி”, “திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர். இவருக்கு ஒரு முறை பாராட்டு விழா நடந்தது.

Kalaignar
அதில் கலந்துகொண்ட கலைஞர், “ஏ.பி.நாகராஜன் சிறப்பாக படம் எடுப்பதாக அனைவரும் பாராட்டுகின்றார்கள். ஏ.பி.நாகராஜன் சிறப்பாக படம் எடுப்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. சாதாரணமாகவே நாகப்பாம்பு சிறப்பாக படம் எடுக்கும். அப்படி இருக்க இவரோ நாகராஜன். நாகராஜன் எப்படி படம் எடுக்காமல் இருப்பார்” என்று பேசினார். அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்தபடியே கைத்தட்டி அவரது பேச்சை ஆமோதித்தனர்.
இதையும் படிங்க: இயக்குனர் சொன்ன அந்த வார்த்தை! கதறி அழுத தங்கவேல்.. படப்பிடிப்பில் நடந்த ரகளை!