கலைஞர் கருணாநிதி அரசியல் வாழ்க்கையில் தனி இடத்தினை உருவாக்கியது போலவே சினிமாவிலும் ஒரு இடத்தினை உருவாக்கி இருந்தார். அவரை போல வசனம் எழுதவே இன்னொருத்தர் பிறந்து தான் வர வேண்டும் என்ற நிலை தான் இன்னமும் இருக்கிறது. அவர் வசனத்தினை பேசினாலே நடிப்பில் கில்லாடியாக தான் இருப்பார்.
கலைஞரின் பெண்சிங்கம் படத்திற்கு தேனிசை தென்றலாக தமிழ் சினிமாவில் இன்னமும் ஜொலித்து கொண்டு இருக்கும் தேவா தான் இசையமைப்பு செய்தார். அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல பெரிய ஹீரோக்களுடன் பணியாற்றி இருக்கிறார். இருந்தும் கலைஞருடன் பணியாற்றிய அப்படத்தின் அனுபவங்கள் குறித்து தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வெறித்தனமான லுக்கில் விஜயகாந்த் மகன்!.. தெறிக்கவிடும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ..
அப்பேட்டியில் இருந்து, மற்ற நடிகர்களுடன் பணியாற்றியதை விட கலைஞருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையானதாக இருந்தது. பெண்சிங்கம் படத்தின் ரெக்கார்டிங் பணிகள் எல்லாமே கலைஞரின் இல்லத்தில் தான் நடைபெற்றது. இதற்காக காலையிலேயே அவரின் இல்லத்துக்கு சென்று விடுவோம்.
ட்யூன்களை எல்லாம் மகாபலிபுரத்தில் போட்டு விட்டு அவர் வீட்டில் அப்பாடல்களுக்கான வரிகளை கோபாலபுர வீட்டில் கலைஞர் எழுதினார். ஆனால் இரண்டும் அப்படி ஒரு அளவில் செட்டாகியது. ஒரே இடத்தில் எழுதிய பாடல்களை விட இந்த பாடல்கள் ரொம்பவே செட்டாகியது.
இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..
ஒரு பாடலுக்காக அவரிடம் ஒரு டம்மி வரிகளை எழுதி பாடினேன். அது, சிந்தாதரிப்பேட்டை சிரிக்கி எனத் தொடங்கிய பாடலை கேட்டுக்கொண்டு இருந்த கலைஞர், அட தேவா அது என்னோட தொகுதி. இப்படி என் படத்திலே வரிகள் போட்டால் அது நல்லாவா இருக்கும் எனக் கேட்டாராம். டம்மி வரிகள் என்றாலும் பிடிக்காத, சரியில்லாத வரிகளை எப்போதுமே கலைஞர் ஒப்புக்கொள்ள மாட்டாராம்.
இப்படம் கலைஞரின் 83வது பிறந்தநாளில் வெளியானது. இயக்குனர் இளவேனில் துவங்கினாலும் அறிமுக இயக்குனர் பாலி ஸ்ரீரங்கத்தின் இயக்கத்தில் தான் படம் முடிந்தது. நீதிக்காக போராடும் பெண்ணை பற்றிய இக்கதையில் மீரா ஜாஸ்மின் முதல் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…