ஆட்சிக்கு வந்தவுடன் ஜொலிஜொலிக்குது கலைஞர் டிவி.! என்னென்ன படங்கள் வரப்போகுது தெரியுமா.?!

கடந்த முறை அதிமுக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் பாகுபலி போன்ற பெரிய படங்கள் ஜெயா டிவி வசம் இருந்தன. தற்போது அப்பட தொலைக்காட்சி உரிமம் அவர்களிடம் இருக்கிறது. அதே போல, திமுக ஆட்சி தற்போது வந்துள்ளதால், தற்போது கொஞ்சம் பெரிய, முன்னணியில் பேசப்படும் திரைப்படங்கள் கலைஞர் டிவி கைவசம் வந்துள்ளன.
அது ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்க கூடாது. தற்போது நல்ல விலை யார் தருகிறார்களோ அவர்களுக்கு பட தயாரிப்பு நிறுவனம் தொலைக்காட்சி உரிமத்தை கொடுத்துவிடும். கலைஞர் டிவி நிர்வாகம் தனது சேனலை முன்னணியில் கொண்டுவருவதற்கு பல பெரிய திரைப்படங்களை தன் அசமாகியுள்ளது.
ஏற்கனவே அமேசான் தளத்தில் வந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்ற ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தையும், அதே போல சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் கலைஞர் டிவி வாங்கி பொங்கல் தினத்திற்கு திரையிட்டது.
இதையும் படியுங்களேன் - விஜய்க்கு அப்டி ஒரு ஹிட் கொடுத்த இயக்குனரின் அடுத்த அப்டேட்.! அதள பாதாளத்துக்கு போய்ட்டாரே.!
அதற்கடுத்து, தற்போது முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படத்தை சுமார் 18 கோடிக்கு வாங்கியுள்ளதாம் கலைஞர் டிவி. சூர்யா படம் கூட அந்தளவுக்கு விலை போகவில்லை என கூறுகின்றனர் சிலர். அதே போல ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரவேற்பை பெற்ற ஜெயில் படத்தையும் கலைஞர் டிவி வாங்கியது.
அதே போல, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தயாரிக்கபடும் திரைப்படத்தை கலைஞர் டிவிதான் ஒளிபரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி தயாரித்து நடிக்க உள்ள மாமன்னன் திரைப்படமும் ரிலீசுக்கு பின்னர் கலைஞர் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.