Cinema News
கலைஞரே கூப்பிட்டு இப்படி சொல்லும் போது மறுக்க முடியுமா? ‘தூக்குமேடை’யில் சந்திரசேகர் நடிக்க காரணம்
தமிழில் நல்ல தமிழில் உச்சரித்து பேசி நடிக்கக் கூடிய நடிகர்கள் சில பேரை மட்டும்தான் பார்க்க முடியும். அந்த வகையில் வாகை சந்திரசேகர் எந்த மாதிரியான வசனமானாலும் அதை தூய தமிழில் பேசி நடிப்பதில் சிறந்த நடிகர். நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இவர் இருந்து வருகிறார். 1980கள் காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடிப்படையில் இவர் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே திமுக கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர் வாகை சந்திரசேகர். எண்ணற்ற திரைப்படங்களில் பல நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இன்று வரை ரசிகர்களிடம் அவருக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது.
இதையும் படிங்க: Gossip: எல்லாம் போச்சு… அக்கட தேசத்தை நம்பி இருந்த பேரை கெடுத்துக்கிட்ட சன் நடிகர்…
இந்த கேரக்டரில் வாகை சந்திரசேகர் நடிக்கிறாரா என்றால் சிறிதளவு கூட அந்த கதாபாத்திரத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்காது. அப்படித்தான் இவரும் தன்னுடைய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். கலைஞர் குரலில் பேசி பல மேடைகளை அதிர வைத்திருக்கிறார்.
விஜயகாந்துக்கு மிக நெருக்கமான நண்பரும் கூட. இந்த நிலையில் வாகை சந்திரசேகர் சமீபத்தில் சூது கவ்வும் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கலைஞர் பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். சூது கவ்வும் 2 படத்தில் வாகை சந்திரசேகர் ஒரு கண்ணியமான அரசியல்வாதியாக நடித்திருக்கிறாராம். ஒரு முறை கலைஞர் வாகை சந்திரசேகரை அழைத்து தூக்கு மேடை படத்தில் நடிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
அதுமட்டுமில்ல சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் இவர்களுக்கு பிறகு நல்ல தமிழ் உச்சரிப்புடன் வீர வசனங்களை பேசும் நடிகராக நீ இருக்கிறாய். அதனால் நீ தூக்கு மேடை படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னால் உனக்கான நிறைய வசனங்கள் அந்தப் படத்தில் இருக்கின்றது. ஆனால் அதன் மூலம் பல எதிர்ப்புகளை நீ சந்திக்க நேரிடும்’ என்று கூறினாராம்.
இதையும் படிங்க: Gossip: எல்லாம் போச்சு… அக்கட தேசத்தை நம்பி இருந்த பேரை கெடுத்துக்கிட்ட சன் நடிகர்…
உடனே வாகை சந்திரசேகர் ‘பராசக்தி, மனோகரா போன்ற படங்களின் வசனங்களை பேசி நடிக்க வந்தவன் நான். எனக்காக நீங்கள் வசனம் எழுதும் போது எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை. நான் நடிக்கிறேன்’ என்று கூறினாராம். ஆனால் கலைஞர் சொன்னதை போல நிறைய எதிர்ப்புகளையும் வாகை சந்திரசேகர் சந்தித்தாராம். மேலும் அந்தப் படத்தில் வாகை சந்திரசேகர் 20 பக்க வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி நடிகர்களை தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்தவில்லையோ என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.