கூடவே இருந்து கட்சித்தாவிய நடிகை! கலைஞர் சொன்ன அந்த வார்த்தை - உண்மையிலேயே பெரிய மனுஷன்தான்
Kalaingar Karunanithi: தமிழ் சினிமாவிலும் சரி பொதுவாழ்க்கையிலும் சரி மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் கலைஞர் மு. கருணாநிதி. அரசியலில் கருணாநிதிக்கு சரி போட்டியாக இருந்தவர் செல்வி ஜெயலலிதா. ஆனால் நிஜத்தில் கருணாநிதி எப்படிப்பட்ட மன நிலையில் இருந்தார் என்பதை பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஆர்த்தி கணேஷ்கர் திருமணத்தை நடத்தி வைத்ததே கருணாநிதிதானாம். அதுமட்டுமில்லாமல் கலைஞர்தான் ஆர்த்திக்கு கலைமாமணி விருதையும் கொடுத்திருக்கிறார். இந்த பழக்கத்தின் காரணமாக தேர்தல் பிரச்சாரமும் ஆர்த்தியும் கணேஷ்கரும் கருணாநிதிக்காக செய்திருக்கிறார்களாம். ஆனால் ஆர்த்தி கட்சி உறுப்பினரா என்றால் இல்லை.
இதையும் படிங்க: பெரிய ஆப்பா வைக்க போறாங்க போலயே… முத்துக்கு தான் எப்பையும் பிரச்னை கொடுப்பீங்கப்பா…
ஆர்த்தியின் தேர்தல் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட ஜெயலலிதா ஆர்த்தியை வரவழைத்து ‘உன்னுடைய பேச்சு நன்றாக இருக்கிறது. இனி தேர்தலில் எனக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என கூறி உறுப்பினர் கார்டையும் ஆர்த்தியிடம் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. இதை ஆர்த்தி கணேஷ்கரிடம் வந்து சொல்ல இருவருக்கும் சரி சண்டை நடந்திருக்கிறது.
ஏனெனில் கணேஷ்கர் கருணாநிதியின் தீவிர பக்தர். இருந்தாலும் ஒரு விழாவில் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு ஆர்த்திக்கு கிடைக்க அவரிடம் ஆர்த்தி ‘ஐயா என்னை அம்மா அழைத்து அவருக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய சொன்னார்கள்’ என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: SK21 படத்துக்காக சிவகார்த்திகேயன் பட்ட பாடு!. படத்துல பாருங்க!.. ஜிம் டிரெய்னர் சொல்றத கேளுங்க!..
இதைக் கேட்டதும் கருணாநிதி ‘ஓ அப்படியா? நல்லது. இனிமேல் உன்னை பார்க்க வேண்டுமென்றால் கொடநாடுக்குத்தான் வரனும் போல’ என கிண்டலாய் சொல்லி சென்றாராம். ஆனால் ஆர்த்தியை பொறுத்தவரைக்கும் அரசியலில் என முதன் முதலில் கட்சி உறுப்பினராக சேர்ந்தது என அதிமுகதான். கலைஞரிடம் ஒரு அன்புக்கு பாத்திரமாகத்தான் இருந்தேன். மற்றப்படி அந்த கட்சியில் இருந்து இந்த கட்சிக்கு என நான் மாறவில்லை என கூறினார்.
கருணாநிதியின் இந்த செயலால் ஆர்த்தி மிகவும் ஆச்சரியப்பட்டாராம். இதுவே வேறொரு ஆளா இருந்தால் கண்டிப்பாக கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் ஐயா மிகவும் பெருந்தன்மையுடன் செயல்பட்டார் என ஆர்த்தி கூறினார். இதோடு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்த்தி ‘ நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்’ என எழுதிக் கொடுத்தும் வந்துவிட்டாராம்.
இதையும் படிங்க: குடியை நிறுத்திய அஜித்! அதற்கு காரணமே இவர்தானாம்.. என்ன ஒரு நட்புபா?