படத்துக்காக போஸ்டரெல்லாம் ஒட்டியிருக்கேன்..! – ரஜினி பட தயாரிப்பாளர் பட்ட கஷ்டங்கள்…

தமிழ் சினிமாவின் தூண்கள் என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கூறலாம். தொடர்ந்து தமிழ் சினிமா வளர்ந்து வருவதற்கு இவர்களே முக்கிய காரணமாக உள்ளனர். திரைப்படம் எடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறவர்கள் தயாரிப்பாளர்கள்தான்.

ஏனெனில் ஒவ்வொரு படத்திற்கும் முழு செலவை ஏற்று செய்யக்கூடியவர்கள் தயாரிப்பாளர்களே. தயாரிப்பாளர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை எடுக்கின்றனர். ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் அதன் முழு நஷ்டமும் தயாரிப்பாளரையே சேரும்.

இதனால் சினிமாவில் வென்ற தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், அதே போல தோற்று போன தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் எப்போதும் கதையை சரியாக தேர்ந்தெடுக்கும் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருபவர் கலைப்புலி எஸ்.தாணு. தாணு தயாரிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அதிகப்பட்சம் ஹிட் கொடுத்துவிடும்.

தயாரிப்பாளரின் ஈடுபாடு:

கிட்டத்தட்ட அவர் தயாரித்த திரைப்படங்களில் 90 சதவீத திரைப்படங்கள் ஹிட். கபாலி, தெறி போன்ற திரைப்படங்களும் அதில் சேரும். இப்போதுள்ள தயாரிப்பாளர்கள் அந்த அளவிற்கு வெற்றி படங்களை தேர்ந்தெடுப்பது இல்லையே என ஒரு பேட்டியில் தாணுவிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த தாணு, நான் படம் ஓட வேண்டும் என்பதற்காக கடும் முயற்சிகளை எடுப்பேன். மிகவும் ஈடுப்பாட்டோடு இருப்பேன். படங்களுக்கு தயாரித்த புதிதில் படத்திற்காக போஸ்டர் ஒட்டும் நபருடன் சேர்ந்து நானும் போஸ்டர் ஒட்டுவேன். நகரின் முக்கியமான இடங்களில் எங்கெல்லாம் போஸ்டர் இல்லை என தேடி சென்று ஒட்டுவோம்.

அந்த அளவிற்கு இருந்த ஈடுபாடே நான் பெரும் தயாரிப்பாளராக மாற உதவியது. அந்த ஈடுபாடு இருந்தால்தான் எந்த தயாரிப்பாளரும் பெரிய ஆளாக வர முடியும் என விளக்கினார் தாணு.

இதையும் படிங்க: டெங்கு காய்ச்சலிலும் படுக்கையில் இருந்தே டைரக்ட் செய்த வெற்றிமாறன்… ஒரு வார்த்தைக்காக இப்படியா கஷ்டப்படுறது!

Related Articles
Next Story
Share it