ரஜினிக்கு கூட இப்படி கிடைக்கலப்பா!.. நீ அதிர்ஷ்டசாலி.. தனுஷிடம் அப்படி என்ன சொல்லியிருப்பார் தாணு?..
தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய ரசிகர் பட்டாளமே அனைவரையும் மிரள வைக்கிறது. ரஜினிக்காக உயிர் கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் அவர் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து வருகின்றனர். ஒரு சாதாரண மனிதராக இருந்து இன்று ஒரு பெரிய ஆளுமையாக உயர்ந்திருக்கிறார் என்றால் அவருடைய கடின உழைப்பும் விடாமுயற்சியுமே காரணமாகும்.
கே பாலச்சந்தரின் அறிமுகம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த அங்கீகாரம், புகழ் ,பெருமை அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அரசியல் தலைவர்கள் சில பேரே அவரைக் கண்டு பயந்து நடுங்கின காலங்கள் உண்டு.
தற்போது ரஜினி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகின்றன. ஒரு பக்கம் ரஜினி அவருடைய உச்சத்தை அடைந்து கொண்டே வருகிறார் என்றால் மறுபக்கம் அவருடைய மருமகன் தனுஷும் நடிப்பில் முழு ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு ரஜினியையும் தனுஷையும் பற்றி ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தனுஷின் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு.
அப்போது அந்தப் படம் கொரோனா நேரத்தில் தயாரிக்கப்பட்டு இருந்ததனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். அதனால் ஓடிடியில் ரிலீஸ் செய்தார்கள். அதற்காக தனுஷ் மிகவும் சிரமப்பட்டாராம். வருத்தப்பட்டாராம்.
அப்போது தாணு கர்ணன் படத்தின் அறிமுக பாடலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட்டாராம். உடனே தனுஷிடம் சென்று இந்த அளவுக்கு உங்களுக்கு அறிமுக பாடல் வந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .ரஜினிக்கு கூட இந்த அளவுக்கு பாடல் அமையவில்லை .உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று சொன்னாராம். அந்த அளவுக்கு கர்ணன் படத்தில் மாரி செல்வராஜ் தனுஷ்க்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தாணு கூறினார்.
இதையும் படிங்க : செண்டிமெண்ட்ட கிண்டலடிச்சவரா இப்படி?!.. இறந்த மனைவி, மகனுக்காக எம்.ஆர்.ராதா என்ன செய்தார் தெரியுமா?…