Connect with us

Cinema History

இந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லையா.?! முதலில் ரஜினி அடுத்து விஜயகாந்த்.!

தமிழ் சினிமாவில் முதலில் அதாவது ஆரம்ப காலகட்டத்தில் ஒரு ஹீரோ வளர்கிறார், அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் பதிய வேண்டும் என்றால், அதற்கு நல்ல கதைகளை எப்படி தேர்வு செய்து நடிக்க வேண்டுமோ அதே போல நல்ல பட்ட பெயர்களையும் சூட்டிக்கொள்ள வேண்டும் அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் போதும் அடுத்தடுத்து அந்த பெயர்கள் தொடர்ந்து பதிந்துவிடும்.

அப்படிதான் , விஜய்க்கு இளைய தளபதி எனும் பட்டம் முதலில் சூட்டப்பட்டு அடுத்தடுத்து அதுவே தற்போது வரையில் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அஜித்துக்கு காதல் மன்னன், லக்கி ஸ்டார் என பல பெயர்கள் வந்தாலும் அல்டிமேட் ஸ்டார் மக்கள் மனதில் பதிந்து வெகு வருடங்கள் நின்றது.

அப்படிதான் சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி நடித்த பைரவி படத்திலேயே கலைப்புலி எஸ்.தாணு வழங்கி இருப்பார். அது படத்தில் வராது. மாறாக , அப்படத்தை விளம்பரம் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பயன்படுத்தினர். கலைப்புலி எஸ்.தாணு தான் அப்போது பிரபல விநியோகிஸ்தர்.

இதையும் படியுங்களேன் – எவளோ வேணும்னாலும் தரேன்.! என்கூட படுக்க வரியா.?! மாஸ்டர் பட நடிகைக்கு நடந்த கொடூரம்.!

அதற்கடுத்து அவர் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜயகாந்த நடித்த கூலிக்காரன் திரைப்படத்தை தயாரித்தார். அப்படத்திற்காக விஜயகாந்த் துப்பாக்கியுடன் இருக்கும் கட்டவுட் போட்டோ தற்போது வரையில் இணையத்தில் பிரபலம் அந்தளவுக்கு விளம்பரம் செய்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் தான் புரட்சி கலைஞர் எனும் பட்டத்தை விஜயகாந்துக்கு, கலைப்புலி எஸ்.தாணு வழங்கி இருந்தார். அந்த பட்டத்தை கேட்டதும் விஜயகாந்த் உணர்ச்சிவசப்பட்டு கலைப்புலி தாணு கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாராம்.இதனை கலைப்புலி எஸ்.தாணு ஒரு விழா மேடையில் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top