சூர்யா மீது கடுப்பாகி விஜய் படத்தை ரீரிலீஸ் செய்யும் தாணு!.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!...

#image_title
Vaadivasal: தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் கலைப்புலி எஸ்.தாணு. 1980களில் திரையுலகில் வினியோகஸ்தராக நுழைந்த தாணு பல புதிய படங்களையும் வாங்கி வெளியிட்டார். வினியோகஸ்தராகத்தான் தாணு நடிகர் ரஜினிக்கே அறிமுகமானார். ஒருவிழாவில் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை கொடுத்ததும் தாணுதான்.
ஒருகட்டத்தில் சினிமாவில் தயாரிப்பாளராக மாறினார். கலைப்புலி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கி விஜயகாந்த் போல பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரிக்க துவங்கினார். விஜயகாந்தை வைத்து இவர் முதலில் தயாரித்த திரைப்படம் கூலிக்காரன். தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக மாறிய தாணு தான் தயாரிக்கும் படங்களை புரமோஷன் செய்வதில் கில்லாடி.
ஒரு படத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? ஒரு நடிகருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்?. ஒரு திரைப்படத்தை ரசிகர்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என எல்லாம் தெரிந்தவர். அதேநேரம், நடிகர்களின் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிடும் தயாரிப்பாளர் என்கிற புகாரும் இவர் மீது உண்டு. விஜயை வைத்து துப்பாக்கி, ரஜினியை வைத்து கபாலி போன்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். கபாலி படத்திற்கு விமானத்தில் பெயிண்ட் அடித்து பறக்கவிட்டு புரமோஷன் செய்தார்.
தனுஷை வைத்து அசுரன் படத்தை தயாரித்த போதுதான் இவருக்கு வெற்றிமாறன் பழக்கமானார். அதைத்தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வாடிவாசல் என்கிற படம் அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. மதுரை பின்னணியில் நடக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான கதைக்களம் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

#image_title
ஆனால், படம் அறிவிக்கப்பட்டு 4 வருடங்களுக்கும் மேல் ஆகியும் இதுவரை வேலை துவங்கவில்லை. ஒரு ஜல்லிக்கட்டு மாட்டை வாங்கி சூர்யா பயிற்சியும் எடுத்தார். ஆனால், வெற்றிமாறன் விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களை முடிக்கவே 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஒருபக்கம் சூர்யாவும் அடுத்தடுத்து வேறு இயக்குனர்களின் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார்.
எனவே, வாடிவாசல் படபிடிப்பு தாமதம் ஆவதற்கு சூர்யாதான் காரணம். அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டால் வேலை துவங்கிவிடும் எனவும் சிலர் சொல்கிறார்கள். அதோடு, சூர்யா பிடி கொடுக்காமல் இருப்பதால் கோபமடைந்துதான் தாணு விஜயை வைத்து தான் தயாரித்த சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார் எனவும் சொல்கிறார்கள். சச்சின் படம் இன்று தமிழகத்தில் பல தியேட்டர்களிலும் மீண்டும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.