சிவாஜியின் கடைசி நிமிடங்களில் நடந்தது இதுதான்!.. தாணு பகிர்ந்த சோக நிகழ்வு!..

sivaji
திரையுலகில் நடிப்பின் சிகரமாக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். நாடங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர். அறிமுகமான முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வழங்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து நடிப்பின் இலக்கணமாக மாறிப்போனார்.
நல்ல கதையம்சம் கொண்ட குறிப்பாக குடும்ப உறவுகளின் மகத்துவத்தை பேசும் பல திரைப்படங்களில் சிவாஜி நடித்தார். திரைப்படங்களில் அழுவதுபோல் அதிகமாக நடித்த நடிகர் இவராகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு சோகமான காட்சிகள் கொண்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

அவருக்கு முன்பும் சரி, அவருக்கு பின்பும் சரி அவரை போல் ஒரு நடிகர் இருக்க முடியுமா என்கிற விவாதத்தை ஏற்படுத்தியவர் சிவாஜி. 2001ம் ஆண்டு சிவாஜி மரணமடைந்தார். உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்த சிவாஜி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘சிவாஜி சாருக்கு என் மீது நல்ல பாசம் உண்டு. வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பார். என்னுடன் குடும்ப விஷயங்களை கூட பகிர்ந்து கொள்வார். அவரின் பேத்தி திருமண வாழ்வு குறித்து அவருக்கு மன உளைச்சல் இருந்தது. என் பேத்தி மகிழ்ச்சியாக இல்லை.. நான் எப்படி நிம்மதியாக வாழ்வேன்?’ என என்னிடம் ஒரு நாள் புலம்பினர். அது நடந்து சரியாக 15 நாட்களில் அவர் மரணமடைந்தார்.

மருத்துவமனையில் அவரின் உயிர் பிரியும் சில நிமிடங்களுக்கு முன்பு நான் அங்கு சென்றேன். அப்போது படுக்கையில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இனிமேல் அதில் பலனில்லை. அதை நீங்களே உங்கள் கையால் எடுத்துவிடுங்கள் என மருத்துவர் சிவாஜி சாரின் மூத்த மகன் ராம்குமாரிடம் சொன்னார். ஆனால், என்னால் அது முடியாது என ராம்குமார் கதறி அழுது கொண்டிருந்தார். எனவே, மனதை கல்லாக வைத்துக்கொண்டு நான் அறைக்கு சென்று செயற்கை சுவாசத்தை அவரின் முகத்திலிருந்து கழட்டினேன். சில வினாடிகளில் சிவாஜி சாரின் உயிர் பிரிந்தது’ என சோகத்துடன் தாணு பகிர்ந்து கொண்டார்.