More
Categories: Cinema History Cinema News latest news

பிரேமலதாவை தூண்டிவிட்டு விஜயகாந்த் – ராவுத்தர் நட்பை பிரித்த தயாரிப்பாளர்!.. அட அவரா?!…

திரையுலகில் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து ஹீரோவாக மாறி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். வில்லனாக நடிக்க துவங்கி, பின் கதாநாயகனாக மாறி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறியவர். குறிப்பாக நகரம் மற்றும் கிராமபுற ரசிகர்களை கவர்ந்தவர். எந்த குக்கிராமம் சென்றாலும் அங்கு விஜயகாந்தின் ரசிகர் மன்றம் இருக்கும். அந்த அளவுக்கு ரசிகர் கூட்டங்களை உருவாக்கி வந்தார்.

vijayakanth

விஜயகாந்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் அவரின் நெருங்கிய நண்பரான ராவுத்தர். துவக்கம் முதலே விஜயகாந்த் நடிக்கும் படங்களின் கதையை கட்டு தேர்ந்தெடுப்பது அவர்தான். மேலும், விஜயகாந்தை ரஜினி, கமல் போல ஸ்டார் ஹீரோவாக மாற்ற ஹீரோயிசம் கொண்ட பல நல்ல கதைகளில் விஜயகாந்தை நடிக்க வைத்தவர். விஜயகாந்தின் கால்ஷீட், வரவு, செலவு என எல்லாவற்றையும் ஒரு மேனேஜர் போல பார்த்துக்கொண்டார். மேலும், பின்னாளில் விஜயகாந்தை அரசியலில் இறக்க திட்டமிட்ட ராவுத்தர் அப்போதே எம்.ஜி.ஆர் பட பாணி கதைகளில் விஜயகாந்தை நடிக்க வைத்தார். உழவன் மகன் திரைப்படமெல்லாம் அப்படித்தான் உருவானது. விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களை ராவுத்தர் தயாரித்தார்.

Advertising
Advertising

ராவுத்தர் என்ன சொன்னாலும் கேட்கும் நபராகத்தான் விஜயகாந்த் இருந்தார். ஆனால், திருமணத்திற்கு பின்னால் எல்லாம் மாறிப்போனது. அதற்கு காரணமாக இருந்தவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. அவர் அப்படி நடந்து கொள்வதற்கு காரணமாக இருந்தவர் தமிழில் பல திரைப்படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் ‘கலைப்புலி தாணு தயாரித்து, இயக்கிய திரைப்படம் தெருப்பாடகன். இந்த படத்தில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தலைப்பை மாற்ற வேண்டும் என ராவுத்தர் நெருக்கடி கொடுக்க புதுப்பாடகன் என தாணு மாற்றினார்.

Kalaipuli S.Thanu

அந்த படத்தில் நடித்ததற்கு பேசப்பட்ட பணத்தை விஜயகாந்துக்கு தாணு கொடுக்கவில்லை. எனவே, ராவுத்தார் அதை தொடர்ந்து கேட்டு வந்தார். இதனால் ராவுத்தர் மீது கோபத்தில் இருந்தார் தாணு. அப்போது விஜயகாந்துக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க போன கலைப்புலி தாணு பிரேமலதாவிடம் ‘உனக்கு குழந்தையெல்லாம் பிறந்துவிட்டது. இனிமேல் விஜயகாந்தின் கணக்கு வழக்குகளை நீயே பார்த்துக்கொள். இல்லையேல் சொத்து உன்னை விட்டு போய்விடும்’ என எச்சரித்தார். அதன்பின்னர் ‘இனிமேல் ராவுத்தர் பெயரை இங்கே யாரும் சொல்லக்கூடாது’ என பிரேமலதா கூறிவிட்டார். மேலும், விஜயகாந்த் நடிக்கும் படங்களின் கதையை அவரே கேட்டார். உதவிக்கு அவரின் தம்பி சுதீப்பை வைத்துக்கொண்டார். இப்படித்தான் விஜயகாந்த் – ராவுத்தர் நட்பு பிரிந்துபோனது’ என சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

தாணுவின் பெயரை அவர் சொல்லவில்லை என்றாலும் புதுப்பாடகன் படத்தை தயாரித்தது அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசிய வீடியோ :

Published by
சிவா

Recent Posts