Cinema History
பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..
சினிமா என்பது 60களுக்கு பின்னர்தான் மக்களிடம் பிரபலமானது. அதற்கு முன்பு மக்களை மகிழ்வித்தது நாடகங்கள்தான். இதில் தெரு நாடகங்கள், மேடை நாடகங்கள் என இரண்டு வைகை உண்டு. இதில், மேடை நாடகங்களில் நடித்து வந்த பலரும் சினிமா பிரபலமாக துவங்கியதும் அங்கு சென்றார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, ரங்காராவ், விகே ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நம்பியார், தங்கவேலு என பலரும் பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டுதான் சினிமாவுக்கு வந்தார்கள். 1950,60களில் சினிமாவில் நடித்த பெரும்பாலானோர் நாடக நடிகர்கள்தான்.
இதையும் படிங்க: இன்னைக்கு சினிமாவில நடக்குற பிரச்சனையே அன்னைக்கே சொன்ன கலைவாணர்… எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி?!
இதில், எல்லா நாடக குழுக்களும் லாபத்தை பெறாது. இதில், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, தங்கவேல், என்.எஸ்.கே உள்ளிட்ட சில நடிகர்கள் தனியாக நாடக குழுவை வைத்திருந்தார்கள். சில சமயம் சிலரின் நாடகங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லையெனில் சரியாக சம்பளம் கொடுக்க முடியாது. அந்த குழுவில் இருப்பவர்களுக்கு உணவு கூட கிடைக்காது. இப்படி பல பிரச்சனைகளை கடந்துதான அவர்கள் திரைத்துறையில் ஜொலித்தனர்.
மற்றவர்களுக்கு உதவுவதில் என்.எஸ்.கிருஷ்ணன் போல ஒரு நடிகரை எப்போதுமே பார்க்க முடியாது. எம்.ஜி.ஆரின் குரு இவர். எம்.ஜி.ஆருக்கு பல நல்ல அறிவுரைகளை சொல்லி சென்றவர். சம்பாதித்த பணத்தில் பெரும்பங்கை தானமாகவே கொடுத்தவர். ஒருமுறை நடிகர் வி.கே.ராமசாமி நடத்தி வந்த நாடககுழு நஷ்டத்தை சந்தித்தது.
இதையும் படிங்க: திரும்ப திரும்ப பாடச் சொல்லி என்.எஸ்.கேவை கடுப்பேத்திய இயக்குனர்! பதிலுக்கு கலைவாணர் செய்ததுதான் ஹைலைட்டு
எனவே, கலைவாணரிடம் உதவி கேட்கலாம் என நினைத்த ராமசாமி தனது குழுவினரை அழைத்துக்கொண்டு அவரை பார்க்க சென்றார். விஷயத்தை கேட்ட கலைவாணர் உள்ளே சென்று ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து ‘இந்த புத்தகத்தின் 30ம் பக்கத்தில் ஒரு கதை இருக்கிறது. அதை நாடகமாக போடு’ என சொல்லி அனுப்பிவிட்டாராம்.
பணம் கேட்கப்போனால் புத்தகத்தை கொடுத்து அனுப்பிவிட்டாரே என நினைத்த வி.கே.ராமசாமி சரி அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக அந்த புத்தகத்தின் 30ம் பக்கத்தை பார்த்துள்ளார். அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் 3 ஆயிரம் என்பது இப்போதுள்ள 3 லட்சத்திற்கு சமம். அதைப்பார்த்த வி.கே.ராமசாமி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததாம்.
இதையும் படிங்க: தனது நண்பரின் உயிரை காப்பாற்ற கொள்கையையே தூக்கி எறிந்த கலைவாணர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?