1957ல் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த படம் அம்பிகாபதி. சிவாஜியின் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்சினிமாவின் செல்வாக்குப் பெற்ற நடிகராக என்எஸ்.கிருஷ்ணன் இருந்தார். தமிழ்சினிமா உலகமே அவருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூட சொல்லலாம்.
அன்பால எல்லாரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தார். சினிமாவில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதைத் தீர்த்து வைக்க எல்லோரும் கலைவாணரையே நாடினர். அம்பிகாபதி படத்தின் போதும் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவரது தம்பியான கண்ணதாசனுக்கும், சிவாஜிக்கும் பெரிய பிரச்சனை இருந்தது.
யாராலும் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. கலைவாணர் தான் இருவரிடமும் மாறி மாறிப் பேசி பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.
உத்தமபுத்திரன் படத்தின் போது ஸ்ரீதருக்கும், எம்ஜிஆருக்கும் இடையே நடந்த பிரச்சனையைத் தீர்த்து வைத்தவரும் கலைவாணர் தான். உத்தமபுத்திரன்படத்தைத் தான் தயாரிக்கப் போவதாக இயக்குனர் ஸ்ரீதர் தெரிவித்தார். இன்னொரு பக்கம் எம்ஜிஆர் இந்தப் படத்தைத் தான் தயாரிக்கப் போவதாகக் கூறி வந்தார். அந்த சமயத்தில் கலைவாணர் எம்ஜிஆரிடம் பேசி அவருக்காக விட்டுக்கொடுங்கள் என்றார். (இந்தப்படத்தில் சிவாஜி கணேசன் தான் நடித்தார்.)
அம்பிகாபதி படத்தில் கலைவாணர் ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது மனரீதியாக கலைவாணர் பெரிதும் பாதிக்கப்பட்டார். அதற்கு முக்கியமான காரணம் அப்போது சினிமா உலகில் சிலர் நடந்து கொண்ட விதம்.
அப்போது கலைவாணர் தன்னோட மன ஓட்டத்தை ஒரு பத்திரிகையில் கட்டுரையாக எழுதினார். சினிமா உலகில் அடி எடுத்து வைக்கிறவரின் மனம் எப்போது பணத்தை நோக்கிச் செல்கிறதோ அப்போது கலை நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை தான் தற்போது தமிழ்சினிமாவில் இருந்து கொண்டு வருகிறது.
சினிமா உலகில் உள்ள எல்லோருமே ஒரு குடும்பம் போல பழக வேண்டும். இப்போது இருக்கின்ற எல்லோருமே உதட்டளவில் மட்டுமே நேசிக்கிறார்களே தவிர அவர்களது உள்ளத்தில் பொறாமையும் போட்டியும் தான் நிரம்பி இருக்கிறது. இந்த கட்டுரை எழுதும்போது 1957. ஆனால் இன்று வரை நீடித்து வருவதுதான் மிகப்பெரிய சோதனை.
இவ்வாறு தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரபல யூடியூபர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…