தொடை நடுவே ரத்தம்.! இப்படி ஒரு வீடியோவை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க.! மெட்ராஸ் நடிகரின் புதிய அவதாரம்.!

by Manikandan |   ( Updated:2022-03-10 12:07:03  )
தொடை நடுவே ரத்தம்.! இப்படி ஒரு வீடியோவை நீங்க பாத்திருக்கவே மாட்டீங்க.! மெட்ராஸ் நடிகரின் புதிய அவதாரம்.!
X

மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தனது திறமையான நடிப்பை மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் கலையரசன். அதன்பிறகு பா.ரஞ்சித் இயக்கிய கபாலி, சார்பட்டா பரம்பரை படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை நல்ல நடிகனாக முன்னிறுத்தி வருகிறார் கலையரசன்.

தற்போது அவர் நடிப்பில் குதிரைவால் எனும் திரைப்படம் தயாராகியுள்ளது. இதுவரை இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் கதைகளம் அனைத்தும் ரசிகர்களுக்கு புதுமையாக உள்ளது. ஹீரோ கலையரசனுக்கு பின்னால் குதிரை வால் முளைத்து விடுகிறது. அதனால் ஏற்படும் உளவியல் பிரச்சினைகள், அது அவருக்கு ஏற்படும் மன குழப்பம் என காட்சிகள் விரிவடைகிறது.

இதையும் படியுங்களேன் - கால்கடுக்க காத்திருந்த கமல்.! கோடி கோடியாய் கொடுப்பவராச்சே நின்னுதானே ஆகனும்.!

அதில், சில காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஓர் இளம்பெண், காலுக்கு நடுவில் தொடைகளுக்கு இடையில் ரத்தம் கசிந்து இருப்பது போலவும், அவர் கதறி அழுவது போலவும்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மாதவிடாய் காலத்தில் வரும் ரத்தப்போக்கு போல அது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியான காட்சியை இதற்கு முன் எந்த சினிமாவிலும் காட்டியதில்லை.

இந்த காட்சிகளை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் கண்டிப்பாக ரசிகர் மனதில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த போகிறது எனு ம் எதிர்பார்ப்பை கூட்டுகிறது. படம் வெளியான பிறகுதான் தெரியும் ரசிகர்களுக்கு அது எந்த மாதிரியான படமாக இருக்க போகிறது என்று.

Next Story