கடைசியா நெல்சனுக்கு காரும் வந்துடுச்சு!.. கலாநிதி மாறன் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட் வீடியோ இதோ!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 600 கோடியை வசூலை நெருங்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு செக் வழங்கிய கலாநிதி மாறன் பிரம்மாண்ட சொகுசு காரையும் பரிசாக வழங்கியிருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டும் செக் மற்றும் கார் கொடுத்தாங்க, இயக்குனர் நெல்சனுக்கு பிம்பிளிக்கா பிளாப்பியா என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

இதையும் படிங்க: பீஸ்ட்ல விட்டத ஜெயிலர்ல புடிச்சிட்டியே நெல்சா!.. நெகிழ்ந்து போன கலாநிதி மாறன்.. வெயிட்டான கவனிப்பு!

இந்நிலையில் அதற்கு ஆப்படிக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு செக் கொடுத்த புகைப்படம் வெளியான நிலையில் கார் கொடுக்கவில்லையே என்றும் கலாய்க்க ஆரம்பித்தன. கொஞ்சம் பொறுங்கப்பா ஒவ்வொன்னா ரிலீஸ் பண்றோம் என சன் பிக்சர்ஸ் தொடர்ந்து தரமான சம்பவங்களை செய்து வருகிறது. தற்போது இயக்குனர் நெல்சன் எனக்கு போர்ஷ் கார் வழங்கிய அட்டகாசமான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் மிகப் பெரிய இயக்குனராக மாறினார். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: குஷி விமர்சனம்: புருஷன் பொண்டாட்டியா விஜய்யும் சமந்தாவும் பர்ஃபெக்ட்டா இருக்காங்களே!..

ஆனால் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை அதற்கு பதிலாக சர்வதேச அளவில் அந்தப் படம் ட்ரோல் செய்யப்பட்டது. இயக்குனர் நெல்சனையும் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் திரைப்படத்தை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத கமர்சியல் ஆக்சன் படமாக கொடுத்து ரஜினி ரசிகர்களை நெல்சன் திலீப்குமார் திருப்தி படுத்திய நிலையில், பாக்ஸ் ஆபிஸில் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு செக் மற்றும் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பெரும் தூணாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கும் செக் மற்றும் காரை கலாநிதி மாறன் வழங்குவாரா என்கிற கேள்வியை தற்போது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it